பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702

பன்னிரு திருமுறை வரலாறு


ஊரை எப்பொழுது ஒற்றியூராக்கிய்ை' என வினவும் நிலை யிலமைந்தது.

அடியோமைத் தாங்கியோ ஆடை யுடுத்தோ குடியோம்ப மாநிதியங் கொண்டோ-பொடியாடும் நெற்றியூர் வாளாவ நீள் சடையாய் நின்னுரை ஒற்றியூ ராக்கிற் றுரை. - எனவரும் பாடலாகும். சிவபெருமான் கோயில் கொண் டருளிய திருத்தலங்களுள் திருவொற்றியூரும் ஒன்று. ஒற்றி யெனற சொல்லுக்கு அடைமானம் என்பது பொருள். அங்ங்ணங்கொள ளவே ஒற்றியூர் என்பது ஒரு வர் பால் கடனுக்கு அடைமானமாக ஒற்றி வைக்கப்பட்ட ஊர் எனப் பொருள்படும். தன்னை ச்சார்ந்த சுற்றத்தார் ஏவலாளர் முதலியோரை உணவு அளித்துப் பாதுகாத்தற் பொருட்டோ அன்றித் தான் ஆடையணிகலன் முதலிய வற்றை நன்ருக அணிந்து செல்வ வாழ்வு வாழ்தற் பொருட்டோ அன்றி வறுமையில் தாழ்வடைந்த தனது குடும்பத்தை உயர்நிலையில் வைததுப் பாதுகாத்தற் பொருட்டோ இவற்றுள் ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு தன்னிடத்துள்ள நிலம் முதலிய பொருள்களை ஒற்றி வைத்துக் கடன்வாங்குதல் உலகத்தாரியல்பாகும். மேற்குறித்த காரணங்களுள் எந்தக் காரணங் கருதி இறைவா நினது ஊரை ஒற்றியூராக்கிய்ை ? எனக் கபில தேவ நாயனர் இறைவனை வினவி மகிழுந்திறம் உணர்ந்து இன்புறத்தக்கதாகும்.

இவர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி ஒன்று முதலாக எனத் தொடங்கி ஒன்று என முடியும் நூறு வெண்பாக்களால் இயன்றதாகும். இந்நூலில் 62-ஆம் பாடலின் இரண்டாமடி சிதைந்துளது. ஆரூர், ஒற்றியூர், ஆவூர், அண்ணுமலை, ஆமாத்தூர், வேங்கடம், கூடல், வெண் காடு, மறைக்காடு, சிரச மலை, பூம்புகார், கானப்பேர், இடுமணல், ஆக்கூர், புறந்தை, காரோணம், ஆடானை, பழனம், புன்கூர், மண்டளி, கோகரணம், கீோப்பாடி, குற்ருலம், கோவணம், புகலூர், களந்தை, தாங்கால், தலையாலங்காடு, திருமாலுமங்கை, செங்குன்றுார், புலிப் பொது, மேற்றளி என்ற திருத்தலங்கள் எதுகை நயம் பொருந்த எடுத்துரைத்துப் போற்றப் பெற்றுள்ளன. இத்திருவந்தாதியிலுள்ள செய்யுட்கள் சில ஏடெழுது