பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருமானடிகள் 711

படுக்கும் மென்மையும் வனப்புமுடையதாய் மிளிர்தலும் என இங்ங்ணம் ஒன்ருேடொன் ருெவ்வா. இயல்பினவாதலை யெண்ணி யுளமுருகிய இளம் பெருமானடிகள், சூலப்படை யானுகிய இறைவனை நோக்கி நின் திருவுருவின் இயல்பு களை இணையவென்றறியும் திறனுடையோ மல்லோம்: என்று கூறிப் போற்றுவதாக அமைந்தது,

சடையே, நீரகந்ததும்பி நெருப்புக்கலிக்குமே மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றுமே வடிவே, முளியெரிகவை இத் தளிர் தயங்குமே அடியே, மடங்கல் மதஞ்சீறி மலர்பழிக் கும்மே அஃதான், றினையவென் றறிகிலம் யாமே முனை தவத்

தலை மூன்று வகுத்த தனித்தாட் கொலையூன்று குடுமி நெடுவே லோயே. என்ற பாடலாகும்.

மாதொரு பாகனகிய பெருமானே, கடல் முகடும் விசும்பும் ஒன்ருய்க்கலந்த ஊழிக் காலப் பெருவெள்ளத்தில் உலகெலாம் மறைய நீ ஒருவனே தனித்து நின்றன யென்பர். அத்தகைய வெள்ளப் பெருக்கினை இப்பொழுது எங்கே மறைத்து வைத்துள்ளாய் அதனை எங்களுக்குச் சிறிது சொல்வாயாக ' என இறைவனை நோக்கி வினவு வதாக அமைந்தது.

வேலை முகடும் விசும்பகடுங் கைகலந்த காலை நீர் எங்கே கரந்தனையால்-மாலைப் பிறைக்கிரு கண்ணுதலா பெண் பாகா ஐயா இறைக் கூருய் எங்கட்கிது. என்ற பாடலாகும். இதனை வீர சோழிய வுரையாசிரியர் தமது உரையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

புலியினது தோலை உடையாக உடுத்த சிவபெருமா எது திருக்கோலத் தோற்றத்தை யெண்ணிய இவ்வா சிரியர், செஞ்சடைத் தீவண்ணரே, இமயத்தரசியாகிய உமையம்மையாரை நீவிர் திருமணம் புரிந்த நாளாகிய திருமணக் காலத்திலும் நுமக்குரிய திருமணவுடையாகத் திகழ்ந்தது இப்புலித்தோல் தானே? " என இறைவனை நோக்கி வினவும் நிலையில்,

இதுநீர் ஒழிமின் இடைதந் துமைஇமை யத்தரசி புதுநீர் மணத்தும் புலியதளேயுடை பொங்குகங்கை முதுநீர் கொழித்த இள மணல் முன்றில் மென் ருேட்டதிங்கட் செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே. என்ற பாடலைப் பாடியுள்ளார். இச்செய்யுள்,