பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740

பன்னிரு திருமுறை வரலாறு


திருமாலும் தேடிக்காளுவண்ணம் பாதாளம் ஏழினுங்கீழ் ஆழ்ந்துசென்ற திருவடியும் உலகினைப்படைத்த நான் முகன் அன்னமாய்மேலே பறந்து சென்றுங் காண முடியாத திருமுடியுங் கொண்டு நீ தில்லைப்பதியிற் சிறிய அம்பலத்திலே யாவருங்கான ஆடியருள்வது அதிசயம் விளைப்பதன்று. பொய்மை, அச்சம், பேராசை முதலிய தீக்குணங்களால் நிரம்பப்பெற்றுச் சிறிதும் இடமின்றி ஐம்பொறிகளாற் சுழற்றப்பட்டு விரைந்து சுழலும் அணுவினுஞ்சிறிய எனது நெஞ்சத்திலே நுழ்ைந்து, நினது விரித்த செஞ்சடையும் சிவந்தவாயும் திருநீல கண்டமும் நெற்றிக்கண்ணும் தூக்கிய திருவடியும் அஞ்சல் என்று அமைத்த திருக்கையும் புள்ளித்தோலாடை யும் தெளிவாக ஒளியுடன் திகழ ஆடியருள்கின்றன. இச் செயலே எனக்கு அதிசயத்தை விளக்கின்றது" எனக் கூத்தப்பெருமானைநோக்கி அடிகள் வியந்துரைப்பதாக அமைந்தது, வரையொன்று நிறுவி யென்ற முதற் குறிப்புடைய அகவலாகும். இதன் கண் திருமால் தேவர் பொருட்டுப் பாற்கடலைக் கடைந்து அமுதளித்ததும், கடையுகத்திறுதியில் தோன்றிய பெருவெள்ளப்பரப்பில், உலகம் அமிழாதபடி சேல்மீனின் உருவுகொண்டு தனது சிறிய செதிளினுள்ளே உலகத்தையடக்கிக் காப்பாற்றிய தும், ஒரு கறபத்தில் உலகங்களையெல்லாந் திரட்டி உண்டதும், குறுமானுருவணுகி இவ்வுலகை மூ வடியால் அளக்கப் புக்குழித் தன்னுடைய ஈரடிகளுக்கு இடனின்றி உலகஞ்சுருங்கத் தான் உயர்ந்து தோன்றியதும் ஆகிய செய்திகள் சுவைபெற விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

அறிவற்ற செய்கையும் பொய்மையும் கொடிய பிணி களும் துன்பத் தொகுதியுமாகிய பல சரக்குகளையேற்றித் தீவினையென்னும் மீகாமன் கருப்பையென்னும் பெரிய பட் டினத்தின் துறைமுகத்தை நோக்கிச் செலுத்த ஐம்புலன் களாகிய பெரிய சுரு மீன்கள் தொடர்ந்து தாக்கப் பிறப் பென்னும் பெரிய கடலிற் புகுந்து துன்பமாகிய அலைகளின் பெருக்கில்ை நிலைபெயர்ந்தலந்து குடும்பமென்னும் வலிய பாறையிலே மோதுண்டு நிறையென்ற பாய்மரம் முரிய அறிவென்னும் பாய் கிழிந்து தீமையுற்ற உடம்பாகிய மரக் ', 'சிக்கு சிதைவுற்று அமிழ்வதன்முன்னே தில்லையம்பலவாணனுகிய கீ நின்திருவருளாகிய பெரிய