பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பன்னிரு திருமுறை வரலாறு


விதியுடையராய்த் ம் செயலர் mச் சிக்கன் சிவமாகத் u; ராயத த நீ ): ததஞ ச த திகழ்ந்தனர். அடிகளது இவ்வதுபவ நிலை,

நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா நயத்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேனங் கொட்டாமோ இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன். ' கயல்மாண்ட கண்ணிதன் பங்கனெனேக் கலந்தாண்டிலுமே அயல்மாண் உருவினைச் சுற்றமுமாண் டவனியின் மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய செயல் மாண்ட வாயாடித் தெள்ளேனங் கொட்டாமோ திருவார் பெருந்துறை மேயபிரா னென் பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை . ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய் நான் கெட்ட வா பாடித் தெள்ளேனங் கொட்டாமோ ' நவமாய செஞ்சுடர் நல்குதலு நா மொழிந்து சிவமான வாபாடித் தெள்ளே ணங் கொட்டாமோ சிந்தை தனைத் தெளிவித்துச் சிவமாக்கி யென யாண்ட அந்தமிலா ஆனந்தம் எனவரும் திருவாசகத் தொடர்களில் இனிது புலளுதல் காணலாம்.

இங்ங்னம் சிவனருட் கடலில் திளைத்தின்புறும் அடிகள், தாம் குதிரை வாங்குதற் பொருட்டுக் கொணர்ந்த பொன் எல்லாவற்றையும் திருப்பெருந்துறையில் இறைவன் குரு மூர்த்தியாக வந்து தம்மையாட் கொண்டருளிய அன்றே அப்பெருமானிடம் ஒப்புவித்தனரென்பது, அன்றேயென்றன் ஆவியும் உடலும்

உடைமை யெல்லாமும் குன்றே யனை யாய் என்னை யாட்

கொண்டபோதே கொண்டிலையோ

எனவரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும். இங்ங்னம் தம் உடல் பொருள் ஆவி யனைத்தையும் தம்மை யாட்கொண்ட குருமூர்த்திக்கு உரிமையாக்கி அவரது அருள் வழி நின்ற வாதவூரடிகள், ஆசிரியன் பணித்த வண்ணம் அப்பொருளைச் சிவபெருமானது திருப்பணிக்கும் சிவனடி யார்களுக்கும் செலவு செய்தனரென்பது,