பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹫 பன்னிரு திருமுறை விசலாறு

னும் பிரபந்தம் முப்பது பாடல்களால் அமைதுல் வேண்டு மென்பது பாட்டியல் மரபாதலாலும் இந்நூலின்கண் 13 முதல் 30 வரையுள்ள பதினெட்டுப் பாடல்களும் ஏடு களின் சிதைவால் மறைந்து போயின வெனக் கருத வேண்டியுளது.

இனி, ஆ. சிங்காரவேலு முதலியாரவர்கள் எழுதிய உரையுடன் வெளிவந்த பட்டினத்துப் பிள்ளையார் பிரபந்த வுரைப் புத்தகத்தில் திருக்கழுமல மும்மணிக்கோவைக் குரிய 13 முதல் 30 வரையுள்ள பதினெட்டுப் பாடல்களும் உரையுடன் வெளியிடப்பெற்றுள்ளன. இப்பாடல்கள் பதினெட்டும் ஆறுமுக நாவலரவர்களாலும் பின் வந்தவர் களாலும் வெளியிடப்பெற்ற பதினெராந் திருமுறைப் பதிப்புக்களில் இடம் பெறவில்லை. இவற்றின் சொல் நடையையும் பொருளமைதியையும் மேற்போக்காக நோக்குங்கால் இவை திருவெண்காட்டடிகள் வாக் கெனவே சொல்லத் தோன்றும். இப்பாடல்களில் அருட் கலாமதி, அன்னசத்திரம், இரத குளிகை, உபகரணம், கஸ்தூரி, கருட தியானம் சந்திரவிம்பம், பாது, பூதசாரதது 暴莎 மகாதது, பூத பரிணுமம், வயிடூரியம், வித்துருமம் முதலிய வட சொற்களும், பணம் காசு, நங்குரம் முதலிய பிற்காலச் சொல் வழக்குகளும் உள்ளன. திருவெண் காட்டடிகள் பாடிய ஏனைப் பிரபந்தங்களில் ஒரோ விடங் களில் வடசொல் விரவப்பெற்றிருத்தல் உண்மையாயினும் இங்கெடுத்துக் காட்டியன போன்ற புதிய வழக்குக்கள் அப்பிரபந்தங்களில் இல்லை யென்பது அவற்றைப் பயில் வார்க்கு நன்கு புலனும். ஆகவே உரைப்பதிப்பிற் காணப் படும் பதினெட்டுப் பாடல்களும் பிற்காலத்துப் புலவரொரு வராற் பாடிச் சேர்க்கப்பட்டனவெனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். அடிகள் அருளிய பனுவல்களை ஒதியின்புறும் புலவரொருவர் திருக்கழுமல மும்மணிக் கோவையிற் சிதைந்து மறைந்த பதினெட்டுப் பாடல்களுக் கீடாகத் தாம் பதினெட்டுப் பாடல்களைப் பாடிச் சேர்த்து அப்பனுவலே நிறைவு செய்த திறம் வியந்து பாராட்டத் தக்கதாகும்.

பிரமபுரத்துறை பெம்மாளுகிய இறைவன் பெரிய பெரு

மாட்டியுடன் தோணி மீது வீற்றிருந்தருளுந் திருக்கோ லத்தை அழகிய சொல்லோவியமாகப் புனைந்து காட்டுவது