பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 749

அடைந்து இறைவனை வழிபட்டதல்ை தாம் பெற்ற பெரு நலங்களையும் அடிகள் விரித்துரைப்பதாக அமைந்தது,

வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண்டுண்டு பிறிதொன்றி இருந்தேன் இனிச் சென்றிரவேன் ஒருவரை (லாசையின்றி யாதொன்றுமே.

எனவரும் பாடலாகும். அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த, பொந்தைப்பரவி நாம் பூவல்லி கொய்யாமோ ' என்ற திருவாசகத் தொடர்ப்பொருளை உளங்கொண்ட திருவெண்காட்டடிகள் இப்பாடலில் புகழ்மாமருதிற் பெருந்தேன்’ என இடைமருதீசனைப் போற்றியதிறம் நினைந்து மகிழத்தகுவதாம்.

" இடைமருதினை இடமாகக்கொண்டு எழுந்தருளிய என்தந்தையே, அடியேன் பிறவிச்சுழியில் அகப்பட்டுத் தடுமாறும்போது யானுற்ற துன்பத்தினையும் என்னைப் பெறும் நிலையில் என்தாயுற்ற துன்பத்தினையும் உள்ள வாறு அறிவார் உயிர்க்குயிராகிய நின்னைத்தவிர வேறு யாருளர்? பெருகிய துன்பந்தருவதாகிய இப்பிறவிச் சுழலிற்பட்டு யான் இனிப்பிறக்கும் வலியுடையேன ல்லேன். நின்னை உறுதுணையாகப்பற்றிவழிபடும் ஒரு நெறியைத் தவிரப் பிறவிநோய் களைதற்குப் பிறிதொரு வழியும் இல்லை. மீண்டுவாராவழி அருளும் நின் திருவருள் நெறியில் ஒழுகுதற்கு விருப்பு வெறுப்பற்ற ஒருமை மனம் வேண்டும். ஐம்புல வேடர்களின் ஆணைவழி கட்டுப்பட்டு நின்று தானல்லாதவற்றைத் தானெனக் கருதும் மயக்க நிலையினையுடையது என்மனம். இம் மனத்தைக் கொண்டு நின்னை நினைந்துபோற்றுதல் எங்ங்னம் இயலும் ? கல்லைத்தெப்பமாகக் கொண்டு கடலைக் கடக்க வெண்ணிய பேதையர் என் னைத்தவிர வேறு யாருளர்? பிறப்பெனும் பெருங்கடலை அடியேன் கடத்தலும் வேண்டும். அங்ங்னங் கடத்தற்கு உறுதுணையாக நின்னை நினைத்தலும் வேண்டும். ஒரு நெறியில் நின்று நின்னை நினைந்து போற்றும் வண்ணம் என் மனத்தை நீ திருத்தி யருளுதலும் வேண்டும்” எனத் திருவெண்காட்டடிகள் இடைமருதீசனை வேண்டுவதாக அமைந்தது இம்மும்

மணிக் கோவையின் நான்காம் பாடலாகும். "அவனரு