பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774

பன்னிரு திருமுறை வரலாறு


விளங்கும். இதன் முதனூலாகிய திருத்தொண்டத் தொகையையும் இதனை விரித்துரைக்கும் முறையில் தோன்றிய விரிநூலாகிய பெரிய புராணத்தையும் ஒப்பு நோக்கிப் பயில்வார்க்கு இத்திருவந்தாதியின் பொருள் நலங்கள் இனிது புலனுகும்.

(4) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கச் சீகாழிப்பதியில் அவதரித்து உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப்பருகி மூன்ரும் வயதிலேயே தோடுடைய செவியன்' என்னுந் திருநெறிய தமிழ்பாடிச் சிந்தையும் மொழியும் செல்லா நிலையில் அப்பாற்பட்டு விளங்கும் சிவ பரம் பொருளைப் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே: எனத் தம் தந்தையார்க்குச் சுட்டிக்காட்டிய சிவஞானச் செல்வர் திருஞானசம்பந்தரென்பது முன்னர் விளக்கப் பெற்றது. ஆளுடைய பிள்ளையாராகிய அப்பெருந்தகை யாரைத் தம் ஞானகுருவாகக் கொண்டு வழிபட்டு இறை வன் திருவருளைப் பெற்றவர் நம்பியாண்டார் நம்பிகளென் பது அவர் அருளிச்செய்த ஆளுடைய பிள்ளையார் திரு வந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை என்னுந் செந்தமிழ்ப் பனுவல்களால் நன்கு விளங்கும். இப் பிரபந்தங்கள் ஆறும் திருஞானசம்பந்தப் பிள்ளே யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றன வாத லின், ஆளுடையபிள்ளை யாராகிய அவர் திருப்பெயருடன் இயைத்து வழங்கப் பெறுவனவாயின. திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வரலாற்றிற் காணப்படும் சிறப்புடைய நிகழ்ச்சிகள், பிள்ளையார் பிறந்தருளியதன் பயனுகத் தமிழகத்தார்பெற்ற பெருநலங்கள், சிவஞானச் செல்வ ராகிய பிள்ளை யாருடைய திருவருட்பண்புகள், அவர் திருவாய் மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பதிகங்களின் பொருள் நலங்கள், அத்திருப்பதிகங்களால் தமிழ் நாட்டில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் முதலியவற்றை இப் பிரபந்தங்களில் நம்பியாண்டார் நம்பி விரித்துரைத்துப் போற்றியுள்ளார்.

e ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி யென்பது நூறு கட்டளைக் கலித்துறைகளால் இயன்ற பிரபந்தமாகும்.