பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் $శ్లేజ్

வானத்தின் கண்ணே விளங்கும் வெள்ளியாகிய மீன்

தான் நிற்றற்குரிய வட திசையில் நில்லாமல் தென்றிசைக் கண்ணே சென்ருலும், மேகம் தன்துளிகளை யுணவாகக் கொண்ட வானம்பாடி வசட்டமுறப் பெய்தலைத்தவிர்ந்து வற்கடகாலம் ஏற்பட்டாலும், தான் பொய்யாமற் காலந் தோறும் வருகின்ற தீர்மையை யுடையது குடகமலை யிடத்தே தல வினையுடையதாய்க் கடலிடத்தே செல்கின்ற புகழ்மிக்க காவிரியாறு என்பதனை,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

தற்பாடிய தளியுணவின்

புட்டேம் பப் புயன்மாறி

வான் பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத் தலை: கடற்காவிரி ! (பட்டினப் பாலை - 1-8) எனவரும் தொடர்களிற் கடியலூர் உருத்திரங் கண்ணளுர் தெளிவாகக் குறித்துள்ளார். இங்கனம் என்றும் பொய்யா தளிக்கும் காவிரியின் புகழ்த்திறத்தினை,

' கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

கால்பொரு நிவப்பிற் கடுங்கு லேற்ருெடுஞ்

சூன்முதிச் கொண் மூப் பெயல் வளஞ் சுரப்பக்

குடமலைப் பிறந்த கொழும்பஃரு மொடு

கடல் வளனெதிரக் கயவாய் நெரிக்குங்

காவிரிப்புது நீர் ” (சிலப் நாடுகாண் 103 - 108)

என இளங்கோவடிகளும் குறித்துப் போற்றியுள்ளார்.

சையமலையினின்றும் பெருக்கெடுத்து வரும் தலைமை வாய்ந்த காவிரியாறு, உலகில் உள்ள எல்லாவுயிர் களையும் வளரச் செய்து நாள்தோறும் அவ்வுயிர்கள் உய்யும்படி அருள் சுரந்து ஊட்டும் நன் னிர்மையால் செம்மை வாய்த்த நிலமகளுக்குச் செவிலித்தாய் போன்றுள்ளது என்பார்,

' பூந்தண் பொன் னி எந்நாளும் பொய்யாதளிக்கும்

புனல் நாட்டு ' (பெரிய-சண்டேசர் - 4) எனவும்,

  • பருவமருப் பொன்னி' (சம்பந் - 338)

எனவும் வரும் தொடரிற் சேக்கிழாரடிகளும் குறித் துள்ளமை காணலாம். இவ்வாறு வான் பொய்ப்பினும்