பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் శిక్షీ

தன்னிரையும் கொண்டு தன் செம்பொன்மயமான இரு கரைகளிலும் அமைந்த எண்ணில்லாத சிவாலயங்களிலே இறைவனை இறைஞ்சிச் செல்லுதலால் ஈசனுக்கு அன்புடைய சிவனடியார்களையும் ஒத்து விளங்குகின்றது என்பார்,

வம்புலா மலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார் கரை யெண் ணில் சிவாலயத் தெம்பிரான விறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகற் கன்பரும் ஒக்குமால் ' 'திருநாட்டுச் - i}

என ஏதுவுவமை என்னும் அணிநலம் பொருந்தக் கூறிஞர். காவிரியின் புது வெள்ளப் பெருக்கினைக் கூறுமிடத்து, ஒளிமிக்க அப்பொன்னி நதியின் தன்னிர் தெளிவின்றிக் கலங்கி வருதற்குரிய காரணம் கூறுவாராய்,

வாச நீர் குடைமங்கையர் கொங்கையிற்

பூசு குங்குமமும் புனே சாந்தமும் வீசு தெண் டிரை மீதழிந் தோடு நீர் தேசுடைத் தெனினுந் தெளிவில்லதே ' (திருநாட்டுச் - 8)

என அந்நீரின் இயல்பினை இனிது புலப்படுத்தியுள்ளார்.

காவிரியாற்றின் வருகையை எழில்பெறப் புனைத் துரைக்கும் முறையில்,

  • மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடையது போர்த்துக்

கருங் கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி ’’

(சிலப் - கானல்வரி - 25)

என இளங்கோவடிகள் காவிரியை வாழ்த்துகின்ருர், இதனை நினைவு கூரும் முறையில்,

மாவிசைத் தெழுந்தார்ப்ப வரைதரு பூவிரித்த புதுப் புனல் பொங்கிட அாவியிற் பொலி நாடு வளத் தரக் காவிரிப் புனல் கால் பரந்தோடுமால் ” 'திருநாட்டுச் - 9)

எனச் சேக் கிழாரடிகள் காவிரிப் புதுப் புனல் வெள்ளத்தைக் குறித்துள்ளார். காவிரியிற் புதுப்புனல் வரக் கண்ட உழவர்களின் ஆரவார ஓசையினையும் அப்புனல் மதகின் வழியாகப் புகுந்து பாய்வதன் ஒசையினையும்,

  • உழவரோதை மத கோதை யுடை நீரோதை தண்பதங்கொள்

விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி "

(சிலப் - கானல் வரி - கி