பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 8娜?

"உடந்த செந்தாமரை புள்ளுறு சோதி

நடந்த செந்தாமரை ' (2484) எனவரும் திருமந்திரத் தொடரை ஆசிரியர் இச்செய்யுளிற் பொருத்தமுற எடுத்தாண்டுள்ளமை காணலாம்.

அன்புடையராய்க் கேட்டோரது உள்ளத்தினையுருக்க வல்ல தேவாரத் திருப்பதிகங்களை ஆர்வமுடன் பயின்று ஒதும் அன்பர்கள் விரும்பியுறையும் சிறப்புடையது திருவாரூர் என்பதனை,

' உள்ள மாருரு காதவ ரூர் விடை

வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாம் தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள் பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்" (திருநகரச்-8) எனவரும் செய்யுளில் சேக்கிழாரடிகள் கற்போர் மனங் கசிந்துருக எடுத்துரைத்துள்ளார். இச்செய்யுள்,

பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்ருேதும்

ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும்

மிழலையாமே (1-182-1) எனவும்,

வேதத்தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே

(2-6-2) எனவும் வரும் திருப்பதிகத் தொடர்ப் பொருளை நினைவு கூரும் முறையில் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத் தக்கதாகும். சிவமுயன்றடையும் தெய்வக்கலையினைத் திருத்தமுறப் பயிலுதலே நகர் வாழ்வார்க்குரிய சிறப்பாகும். இச்சிறப்பினை,

  • தண்னென்சோலை யெம்மருங்கும் சாருமடமென்

சாரிகையின் பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன்

பொழியுமால் ' (பெரிய - முருக - 3) என முருகநாயனர் புராணத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தக்கதாகும்.

ஒளிதிகழும் அணிகலன்களாலும் பேராரவாரத்தாலும் வழங்கக் குறையாத பண்டங்களின் மிகுதியாலும் திருவாரூரில் உள்ள ஆவண வீதிகள் கடல் போன்று விளங்குதலை,