பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 87i.

திலேயே தன்மைந்தனையும் தேர்க்காலிலிட்டு ஊர்தல் வேண்டும் என்பான், முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க " என்ருன். அரசன் துணிந்ததும் அணைந்ததும் ஊர்ந்ததும் ஆகிய செயல்கள் ஒன்றன்பின் ஒன்ருய் விரைந்து முடிந்தன என்பார், அனகன் அரும் பொருள் துணிந்தான், மறுகணைந்தான், தன் மைந்தன் மருமம் தன்தேராழி உற ஊர்ந்தான் என முற்றுச் சொற்களால் அடுக்கிக் கூறினர் ஆசிரியர்.

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் ” என்ற சிலப்பதிகாரத் தொடர்ப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

" ஒரு மைந்தன் தன் குலத்துக் குள்ளானென்பது முனரான்

தருமம் தன் வழிச்செல்கை கடனென்று தன் மைந்தன் மருமம் தன் தேராழியுறவூர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோ தான் ” (44) என்ற செய்யுளாகும். பிழையுயிரெய்திற் பெரும் பேரச்சம்' (சிலப் - காட்சிக்-101) ஆதலின், அரசாட்சி எளிதோ என்ருர், பிறர் எண்ணுவது போல அத்துணை எளிய தன்று; மிகவும் அரிதேயாம் என்பது கருத்து.

தண்ணளிவெண்குடை வேந்தன் செயல் கண்டு வீதி விடங்கப் பெருமான் விடைமீது அம்மையப்பராய் எதிர் தோன்றி அருள் செய்தபொழுது அந்நிலையே உயிர்பிரிந்த ஆன் கன்றும் அவ்வரசன் மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழுந்த செய்தியைக் கற்போர் உளம் அமைதியுறும் நிலையில் ஆசிரியர் சுவை பெறக் குறித்துள் ளார். பசுவின் துயரத்தை அகற்ற மாட்டாது வருந்திய மன்னவன் அப்பசுவின் துயர் அகன்ற பிறகே மனமகிழ் வான் ஆதலானும், பசுவின்கன்று உயிர்பெற்றெழாத நிலையில் பசுவின் துயரும் அது காரணமாக மன்னன் மனத் துயரும் நீங்கும் வழியில்லையாதலானும், எல்லாத் துயர்க்கும் காரணமாய் முதற்கண் இறந்தது பசுவின் கன்றேயாதலா னும் கன்று உயிர்பெற்றெழுதலை முதற்கண் கூறினர். அரசகுமரனது உயிரைப் போக்குதற்கு அஞ்சியே தன்னுயிர் துறந்தவன் மந்திரியாதலான், அவன் மைந்தனை உயிரு டன் கண்டாலல்லது உயிர் தாங்கியிரான். ஆகவே அவன் அரச குமரனை உயிருடன் கண்டு தன் துயரினைப் போக்கி