பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 பன்னிரு திருமுறை வரலாறு

யில் நனைந்தவராய், அமர்நீதியாரை யணுகி யாம் கொடுத்த கோவணத்தைக் கொண்டுவாரும் என்ருர், வைத்த இடத்திற் கோவணத்தைக் காணுது மனங்கலங் கிய அமர்நீதியார், ! ஐயா, நீர் தந்த கோவணத்தை வைத்த இடத்திற் கண்டிலேன். இதனை ஒளித்து வைத்தவர் யாருமில்லை. வேறு நல்லதோர் கோவணம் தருகின்றேன் எனக் கூறினர். அது கேட்டு வெகுண்டார் அந்தணர். அது கண்டு பொறி கலங்கிய உணர்வின ரான அமர்நீதியார், அடியாரைப் பணிந்து போற்றி தாங்கள் தந்த கோவணத்துக்கு ஈடாக விரும்பத் தகுந்த நல்ல பட்டாடைகள் மணிகள் முதலியவற்றை ஏற்றுக்கொண்டு சிறியேனது பெரும் பிழையைப் பொறுத் தருளுதல் வேண்டும் ' என வேண்டினர். நீர் தந்த மணியும் பொன்னும் எனக்கு என்ன பயனைச் செய்வன ? நான் உம்மிடம் தந்த கோவணத்துக்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்துக்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினர் அந்தணர். நன்று ' என ஏற்றுக்கொண்ட அமர்நீதியார், ஒரு தராசினை அங்குக் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு தட்டில் அடியார் தந்த கோவணத்தை வைத்து, அதற்கு ஈடாகத் தம்மிடம் உள்ள நெய்த கோவணத்தை மற்ருெரு தட்டில் வைத்தபொழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அதுகண்ட அமர் நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற்பொருட்டு வைத் திருந்த கோவனங்களையும் பூந்துகிற்பொதி முதலிய வற்றையும் ஒவ்வொன் ருக இட்ட நிலையிலும் அன்பரது தட்டுமேற்பட அடியாரது கோவனத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், அந்தணராகிய அடியாரது உடன்பாடு பெற்றுத் தம்மிடமுள்ள பொள், வெள்ளி, நவமணித் திரள் முதலிய பலவகை அரும் பொருள்களையும் பின் புதம் மனை வி புதல்வன் ஆகியவர்களை யும் துலையில் அமர்த்தியும், தட்டு நேர் நில்லாமை கண்டு, யாங்கள் இழைத்த அன்பினில் இறை திருநீற்று ெய் யடிமை பிழைத்திலோம் என்ருல் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக! என்று திருவைந்தெழுத் தோதித் தரமும் அதன் கண் ஏறி அமர்ந்தார். அந்நிலையில் இறைவரது திருவரைக் கோவனமும் அமர்நீதியாரது அடிமைத் தொண்டும் ஒத்தலால் அத்தராகத் தட்டுக்கள் இரண்டும்