பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916 பன்னிரு திருமுறை வரலாறு

ஆனய காயஞர்

மேல் மழநாடு என்னும் நீர்நாட்டிலே மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர்குலத்தில் தோன்றியவர் ஆளுயர். மனமொழி மெய்களால் சிவபெருமான வழிபடு மியல்பினராகிய அவர், ஆனிரைகளை அன்புடன் மேய்த்து வருதலைத் தொழிலாகக் கொண்டவர். தீய விலங்கு களால் வரும் இடர் நீக்கிப் பசுக்களைப் புற்கள் வளர்ந்த நிலத்தில் மேய்த்துவரும் ஆளுயர், சிவனடியில் அன்பு மீதுார்ந்த சிந்தையுடன் இன்னிசைத் திறத்தில் வல்ல வராய் இறைவனது திருவைந்தெழுத்தினை வேய்ங் குழலில் வைத்து வாசித்து எவ்வுயிரும் உளமுருக இசையமுதளித்தலைத் தமது பொழுது போக்காகக் கொண்டிருந்தார். கார் காலத்திலே ஒருநாள் ஆயர்கள் பசு நிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, ஆளுயர் கையிலே கோலும் வேய்ங் குழலும் கொண்டு நிரை காத்தற்குக் காட்டினை அடைந்தார். அப்பொழுது அங்குக் கொன்றை மரமானது நீண்ட பூங்கொத்துக்களை யுடையதாய்த் தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமானை யொத்துப் பொலிவுற்றுத் தோன்றியது. அதனைக் கண்டு இறைவன்பால் உருகிய உள்ளத்தினராகிய ஆளுயர், நறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்று, அன் பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக்குழலாகிய வேய்ங் குழலில் இறைவனது திருவைந்தெழுத்தினை இசை நூல் முறைப்படி இனிமையுடன் வாசித்தார். அவரது வேய்ங் குழலிலிருந்து வெளிப்பட்ட இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் கற்பகத்தருவின் விளைதேனைத் தெள்ளமுதினுடன் கலந்து வார்த்தாற் போன்று புகுந்தது. ஆனிரைகள் அறு கருந்தி அசை விடாமல் அவரை அணைந்து நின்றன. பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகள் குடித்தலை மறந்து இசையில் ஈடுபட்டன. எருதுகளும் மான் முதலிய காட்டு விலங்கு களும் மயிர் சிலிர்த்து வந்தணைந்தன. ஆடுகின்ற மயிற் கூட்டங்களும் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன. பறவைகள் இசையில் திளைத்து அவரருகே வந்தன. நிரை மேய்க்கும் இடையர்கள் எல்லாரும் தம் தொழிலை மறந்து இசையினைக் கேட்டு நின்ருர்கள். நாகலோகத்தார், வரையர மகளிர், சாரணர், கின்னரர்,