பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 917

தேவர் முதலிய யாவரும் ஒருங்கு வந்து ஆளுயரது வேய்ங் குழலின் ஏழிசையமுதம் செவிமடுத்துப் பருகினர். பிறரை வருத்தும் வலியவர்களும் பிறரால் துன்புறுத்தப்படும் மெலியவர்களும் இசையின் வயப்பட்டு ஒத்த உணர் வினரானமையால், பாம்புகள் பயமின்றி மயில்களின்மீது மருண்டு விழும் ; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும் ; புல்லருந்திய வாயினவாகிய மான்கள் புலியின் பக்கத்திலே செல்லும் ; மரக்கொம்புகள் சலியாதிருந்தன. இவ்வாறு நிற்பன நடப்பனவாகிய எல்லா உயிர்களும் ஆனய நாயனரது வேய்ங் குழலிசையைக்கேட்டு இசைமயமாயின. மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசையானது வையந்தன்னையும் மறைத்து வானந் தன்மயமாக்கிப் பொதுவில் நடமாடும் ஐயனுகிய இறைவன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது. ஆளுயர் குழலோசை கேட்டருளிய இசையுருவாகிய இறைவன், உமையம்மையாருடன் விடைமீதமர்ந்து விசும்பின் வழியே வந்து தோன்றி ஆளுய நாயனரை அருளுடன் நோக்கி, அன்பனே, செம்மனச் செல்வராகிய தம்முடைய அடியார்கள் நினது வேய்ங் குழலிசையைக் கேட்டு மகிழ இவ்விடத்து வாசித்து நின்ற இந்நிலையிலேயே நம் மிடத்துக்கு வருவாயாக ' என்று திருவாய்மலர்ந் தருளினர். ஆனய நாயனரும் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு இசை விரும்புங் கூத்தனுருடன் சென் றனைந்தார்.

மூர்த்தி காயனர்

சீர்மன்னு செல்வக்குடி மன்னிய சிறப்பின் ஓங்கும் பாண்டி நாட்டிலே ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் வளரும் மதுரையம்பதியிலே வணிகர் குடியில் தோன்றியவர் மூர்த்தி நாயனுர். எப்பற்றினையும் அறுத்து இறைவன் திருவடிகளே மெய்ப்பற்றெனப் பற்றிய இப்பெருந்தகையார், திருவாலவாயில் எழுந்தருளிய சொக்கலிங்கப்பெருமானுக்கு நாளும் திருமெய்ப் பூச்சுக்குச் சந்தனம் அரைத்துத் தருதலைத் தமது சிந்தைக்கினிய திருப்பணியாகக்கொண்டு செய்துவந்தார்.

அக்காலத்தில் வடுகக்கருநாடர் மன்னன், படை

யெடுத்து வந்து பாண்டி நாட்டைக் கைப்பற்றி