பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/947

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 93i

' அண்டமா ரமரர் கோமான் ஆதியெம் அண்னல் பாதம் கொண்டவன் குறிப்பினலே கூப்பினுன் தாபரத்தைக் கண்டவன் தாதை பாய்வான் காலற வெறியக்கண்டு தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே'

(4 – 48 - 4) " தழைத்ததோ ராத்தியின் கீழ்த் தாபர மணலாற்கூப்பி

அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்

கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால்வீசக் குழைத்ததோர் அமுதமீந்தார் குறுக்கை வீரட்டஞரே”

(4 – 49 - 3) " ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூமலி கொன்றை சூட்டப் பொருததன் தாதை தாளைக் கூர் மழு வொன்ருல் ஒச்சக் குளிர்சடைக் கொன்றைமாலைத் தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவிஞரே '

(4 – 65 – 6) " மானிபால் கறந்தாட்டி வழிபட

நீனுலகெலாம் ஆளக்கொடுத்தவன் ' (5 – 2 – 4) ' ஆங்கணேந்த சண்டிக்கும் அருளியன்று

தன் முடிமேல் அலர்மாலையளித்தல் தோன்றும் ”

(6 – 8 – 10)

என ஆளுடைய அரசரும்,

' இண்டைமலர் கொண்டுமன லிலிங்கமதியற்றி

இனத்தாவின் பாலாட்ட இடறிய தாதையைத்தாள் துண்டமிடு சண்டியடி யண்டர்தொழு தேத்தத்

தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கன்'

{7 – 16 – 3)

' மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதை தாள் மழுவினுலெறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கடியேன். '

(7 – 39 – 3) என ஆளுடைய நம்பியும்,

  • தீதில்லைமாணி சிவகருமஞ் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளாற் றேவர் தொழப் பாதகமே சோறு பற்றியவா தோணுேக்கம் ' (திருவாசகம்) என ஆளுடைய அடிகளும் சண்டீசப்பிள்ளையாரது சிவபத்தித்திறத்தைப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள். சண்டீசப் பிள்ளையாரது வரலாறு திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்திற்கு முன்பே அறிஞர்களாற் செவி வழிச் செய்தியாக வழங்கப்பெற்ற தொன்மையுடைய தென்பது,