பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 79

“ பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்,

ஐந்தினை புறுப்பின் நாற்பொருள் பயக்கும் காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப் பொருளெனச் சுட்டிய ஒருபெருஞ் செல்வ ” எனக் குமரகுருபர அடிகளும் தெளிவாகக் குறித்துள்ளமை அறிந்து மகிழத்தக்கதாகும்.

எண்ணிலியாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே என்பது திருவாதவூரடிகள் வாய்மொழி. அடி களது அனுபவவுரையாகிய இம்மெய்ம்மொழிக்கேற்பவே, அடிகளது திருமேனி பருப்பொருளாய் இம்மண்ணிற் கலவாது அருவாய் நுண்பூதத்தொடு கலக்க, அவரது நல்லு யிர் தில்லேச்சிற்றம்பலவன் திருவடி நீழலிற் கலந்து சிவா னந்தப் பெருவாழ்வில் திளைத்தமையாகிய இவ்வற்புத நிகழ்ச்சியும் அமைந்துளது. அடிகள் முத்திபெற்ற இம் முறையை ஆன்ருேள் பலரும் வியந்து போற்றுவர். தில்லைச் சிற்றம்பலமாகிய சிதாகாசப் பெருவெளியிலே மணிவாசகப் பெருமான் கலந்து முத்தி பெற்ற திறத்தை,

வான் கலந்த மாணிக்கவாசக என வடலூர் இராமலிங்க அடிகள் அழைத்துப் போற்றும் அன்புரையாலும்,

' மாணிக்கவாசகர் பேறெனக்குத்தர வல்லாயோ

அறியேன்

கற்பூர தீபம்போல் என்றனுடலைக் கனகசபையில்

கலந்து கொள்வாயே என வரும் முத்துத்தாண்டவர் இசைப்பாடலாலும் நன் குணரலாம்.