பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/950

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

934

பன்னிரு திருமுறை வரலாறு


திருவஞ்சைக்களத்திற் .ெ ச ன் று திருப்பதிகம்பாட அவருக்குச் சிவபெருமானருளால் வடகயிலையை அடையும் பேறு மறுநாள் கிடைக்கவிருப்பதனைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகக்காட்சியால் முதல்நாளில் அறிந்து கொண்டார் ; திருநாவலூரர் திருக்கயிலை நாளே எய்த நான் அவரைப் பிரிந்து கண்ணிற் கரியமணிகழிய வாழ்வார்போல வாழேன் என்று எண்ணி ' இன்றே யோகத்தால் சிவன்தாள் சென்றடைவேன் என்று சொல்லி, நாற்கரணங்களும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு பிரமநாடியின் வழியே கருத்தைச் செலுத்த, யோக முயற்சியினலே பிரமரந்திரம் திறப்பு, உடலி னின்றும் பிரிந்து திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

காரைக்காலம்மையார்

பேயார்க்கும் அடியேன் எனப் போற்றப்பெற்ற அம்மையார் வரலாறு இந்நூல் 519-544 ஆம் பக்கங்களில் விரித்துரைக்கப் பெற்றது.

அப்பூதியடிகள் நாயனர்

சோழ நாட்டில் திங்களூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியார் என்பவர். எல்லையில் தவத்தின் மிக்கவராகிய இவர், தாண்டவம் புரிய வல்ல தம்பிரானுக்கு அன்பர் , திருநாவுக்கரசரைக் காணுதற்கு முன்னமே அவருடைய திருவடிகளை அரணுகப்பற்றி அவரைக்கான வேண்டும் என்னும் ஆர்வம் மேற்பட உள்ளங்கலந்த அன்பினராயுள்ளவர்; களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றங்களைக்கடிந்து விலக்கியவர் , தம்மனையிலுள்ள அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும் உள்ள பொருள்களெல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசின் பெயரிட்டழைக்கும் இயல்பினையுடையவர். திருநாவுக் கரசரை நேரிற்காணுதவராயினும் அப்பரடிகளாகிய அப் பெருந்தகையார் இறைவன் பாற் கொண்டுள்ள அடிமைத் திறமும் அவர்க்கு இறைவன் அருளும் பெருங்கருணைத் திறமும் ஆகியவற்றை அறிந்தோர் சொல்லக்கேட்டுத்