பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/976

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

960

பன்னிரு திருமுறை வரலாறு


கூற்றுவ காயஞர்

களந்தை என்னும் பதிவிலே குறுநிலமன்னர் குடி யிலே தோன்றியவர் கூற்றுவ நாயஞர். இவர், பகைவர் களைப் போரில் வென்று சிவபெருமானது திருநாமமாகிய திருவைந்தெழுத்தை நாளும் நவின்று சிவனடியார்களைப் பணிந்தேத்தித் திருத்தொண்டு செய்பவர் திருவருள் வலியால் அரசர் பலரையும் வென்று நால்வகைச் சேனை களும் நிரம்பப்பெற்று வீரச்செருக்கின் மேலாளுர், வேந்தர் பலரொடும் போர் புரிந்து வாகை மாலை புனைந்து அரசர்க் குரிய முடி ஒன்றும் நீங்கலாக வேந்தர்க்குரிய எல்லாச் செல்வங்களும் எய்தினுர் . உலகங்காக்கும் அரசராகிய கூற்றுவளுர் தில்லைவாழந்தணரையடைந்து தமக்கு முடி சூட்டும்படி வேண்டினர். அந்தணர்கள் சோழ மன்னர்க் கன்றி வேறு யார்க்கும் நாங்கள் முடிசூட்ட மாட்டோம் என்று கூறி, தங்களுள் ஒரு குடியை முடியைக் காத்துக் கொள்ளும்படி இருத்திச் சேரநாட்டையடைந்தார்கள்.

ஐயுற்று மனந்தளரும் கூற்றுவளுர், தில்லையம்பலப் பெருமான மனங்கொண்டு அடியேன் தனக்கு முடியாக நின் திருவடிப்போதினைப் பெற வேண்டும்' என்று பரவித் துயில்கொண்டார். அந்நிலையில் கூத்தப்பெருமான் அவரது கனவில் தோன்றித் தம்முடைய திருவடியை முடியாகச் சூட்டியருளினர். கூற்றுவளுர் அம்பலவர் திருவடிகளை முடியாகத் தாங்கி உலகமெலாம் தனியாட்சி புரிந்து திருத் தலங்களெல்லாம் சென்று சிவபரம் பொருளை வழிபட்டு அரசுபுரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.

பொய்யடிமையில்லாத புலவர்

'பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் என நம்பியாரூரராற் போற்றப் பெற்ற இப்புலவர் பெருமக்கள் திருத்தொண்டத் தொகையிற் குறிக்கப் பெற்ற ஒன்பது திருக்கூட்டத்தாருள் ஒரு திருக்கூட்டத்தார் ஆவர். தம்பி யாண்டார் நம்பிகள்,

" தரணியிற் பொய்ம்மையிலாத் தமிழ்ச் சங்கமதிற் கபிலர்

பரணர் நக்கீரர் முதல் நாற்பத் தொன்பது பல்புலவேசன் அருள் நமக் கீயுந் திருவால வாயரன் சேண்டிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே "