பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/977

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 96 i.

எனத் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவர்களைக் குறித்துப் போற்றியுள்ளார். எனவே மதுரைத் திருவால வாயில் நிலைபெற்ற தமிழ்ச்சங்கத்திலிருந்து திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத்து அகப்பொருட் செய்யுட்களைப் பாடிய சங்கப்புலவர்களாகிய கபிலர் பரணர் நக்கீசர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களும் அவர் களைப் போன்று பொய்ப் பொருட்கு அடிமைப்படாது மெய்ப் பொருளாகிய இறைவனுக்கே அடித்தொண்டு செய்யும் இயல்புடைய புலவர்கள் பலரும் பொய்யடிமையில்லாத புலவர் என நம்பியாரூரராற் போற்றப் பெற்றனர் என்பது வகைநூல் செய்த நம்பியாண்டார் நம்பிகள் கருத்தாதல் நன்கு விளங்கும். நம்பியாரூரர் காலத்திற்கு முன்னிருந்த தமிழ்ச் சங்கப் புலவர்களோடு நம்பியாரூரர் காலத்தும் அவர்க்குப் பின்னும் மெய்ப்பொருள் துணிபுடையராய் இறைவனுக்குத் தொண்டுபட்டிருக்கும் தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் பொய்யடிமை யில்லாத புலவர்' எனத் திருத் தொண்டத் தொகையிற் போற்றப்பெற்றுள்ளார் என்னும் உண்மையினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

"செய்யுள் நிகழ் சொற்றெளிவும் செவ்வியநூல் பலநோக்கும்

மெய்யுணர்வின் பயனிதுவே, எனத் துணிந்து விளங்கியொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே :ாளாளுக் பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார் ” என வரும் பெரிய புராணச் செய்யுளாகும்.

புகழ்ச்சோழ நாயனர் இமயமலையிற் புலி பொறித்து உலகாண்ட வண்டமிழ்ச் சோழர்க்குரிய சோழவள நாட்டிலே உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளுறையூராகத் திகழும் உறையூரிலே சோழர்குடியில் தோன்றியவர் புகழ்ச் சோழர். அவர் உலகமெலாஞ் செங்கோலின் வழிநிற்ப அருமறைச் சைவந்தழைப்ப அரசு புரிந்தார். சிவாலயங்களில் நாள் வழிபாடு செம்மையாக நிகழச் செய்து சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்துத் திருநீற்று நெறிமுறையே நாட்டினை ஆட்சிபுரியும் நாளில் கொங்கர்களும் குடநாட்டு வேந்தர்களும் தரும் திறைப் பொருள்களை வாங்கும் பொருட்டுத் தங்கள் குலத்தார்க்கு உரிமையுடைய கரு ஆரிலே சென்று ஆனிலையண்ணலையிறைஞ்சித் தங்கள் மாளிகையில் அரியாசனத்தில் வீற்றிருந்தார். அப்

61.