பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பெறற்கரிய செல்வமாம் நமது தேகத்தை பேரன்புடன் காத்து வந்தால், நாம் பிறந்த பயனை நிச்சயம் அடையலாம். அதற்காக நாம் காடு தேடி ஓடியோ, கற்றைக் குழலாக முடி வளர்த்தோ, பரதேசியாக வேடம் பூண்டோ, பரந்த உலகில் அலைந்துதான் தேகத்தைக் காக்க வேண்டும் என்பதில்லை. நம்மிடமே உள்ள நல்ல கலையை நயமாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். உடலும் உற்சாகமும் நமக்காக உழைக்கும் உடலை, அதற்கு உற்சாகம் தரத்தக்க முறையில் சில பயிற்சிகளைச் செய்துவந்தால், அந்தப் பயிற்சியிலேயே நமது உடல் செழித்துக் கொள்ளும். திடமாகப் பிழைத்துக் கொள்ளும், தேர்ச்சியுடன் உழைத்துக் கொள்ளும். இப்படி உடற்பயிற்சி முறை என்றதும், பலரும் பல்வேறு விதமான பயிற்சி முறைகளைக் கூறுவர். இருந்தாலும் அத்தனைப் பயிற்சிகளிலும் ஆன்ற ஒன்றாக அமைந்திருப்பதுதான் யோகமுறை உடற்பயிற்சி ஆகும். நமது முன்னோர்களின் மதியூக அமைப்பிலே மலர்ந்த யோகமுறை உடற்பயிற்சிகள், உடலின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும், கிடைக்காத பெருந்துணையாய் அமைந்து காலங் காலமாய் சேவை புரிந்து வருகின்றன. தெய்வம் வாழும் தேகம் தெய்வமாகவி என்று போற்றப்படும் தமிழ்ச் சித்தர் திருமூலர், தனது திருமந்திர நூலிலே பாடுகிறார். உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பினுள்ளே உத்தமன்கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே,