பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 11 நமது உடம்பை இழுக்கென்றும், அழுக்கென்றும் எண்ணுவதை பேதமை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறைவன் என் உள்ளேயும் இருந்து, என்னைப் பெருமைப் படுத்துகிறான் என்ற மெய்யறிவில், மேனி சிலிர்த்தத் திருமூலர் மேலும் பாடுகிறார். உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே உடம்பை வளர்க்கும் என்றது உடம்பின் வலிமையை மட்டுமல்ல, உடம்பில் உள்ள திறமைகளையும்தான். தெய்வம் வாழ்கின்ற திருக்கோயிலாக விளங்கும் நம் தேகத்தைக் காக்கும் சிறந்த உபாயம் என்று நமது முன்னோர்கள் மேற்கொண்ட முறை யோக முறையான உடற்பயிற்சிகளே. தேக நிறைவுக்கு யோகமுறை பயிற்சிகள்தான் தேடி வந்து உதவும் திரண்ட செல்வமாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே உடம்பின் மேன்மையை உன்னதமாக உணர்ந்து, உடல் காக்கும் நுண்ணிய முறைகளைத் தேர்ந்து, வெகுநூதன அமைப்புடன் பயின்று, இன்று உலகமே வியக்கும் வண்ணம், இந்த யோகாசனக் கலையை நம்மிடம் தந்துவிட்டுப் போயிருக்கின்றனர். நாமெல்லாம் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக. நமது மூதாதையர் வழங்கிச் சென்ற மூவா செல்வம்தான் இந்த யோகாசனங்கள். இறையுடலாம் இந்தத் திரு உடல், எஃகு நரம்போடும், ஏக் கழுத் தோடும், கிளர் ஈரலோடும், தடைபடா