பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ ____ --- - _. எல்லா தசைகளையும், உறுப்புக்களையும், நரம்புகளையும் தளர்வாக (Relax) இருக்கச் செய்து ஓய்வு தரவேண்டும். இயல்பான சுவாசம் வழக்கம்போல்தான் இழுத்துவிட வேண்டும். ஏதாவது ஒன்றை நினைத்துக்கொண்டு திட்டமிடுதல், தீர்மானம் செய்தல் போன்றவற்றை விட்டுவிட்டு, கண்களை மூடிக்கொண்டு நிர்மலமான நிலையில் படுத்திருக்க வேண்டும். இந்த பயிற்சியின்போது, துங்கிப்போய்விடக் கூடாது. பயன்கள்: இந்த ஆசனத்தை செய்யும்பொழுது, ஒரு இன்பகரமான, நினைவார்ந்த நலமான சூழ்நிலையை உணரலாம். இத்தகைய சூழ்நிலையை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அந்த நிலையில் இருந்து அனுபவிப்பவர்களே, உணர முடியும். இரத்த ஓட்டம், இதயத்தின் செயல், நாடித் துடிப்பு, எல்லாம் சீராக்கப்பட்டிருக்கின்றன. ஆசனத்திற்காகப் பயன்பட்ட உறுப்புக்கள் பழுதுபட்டுப் போனது எல்லாம், இந்த ஓய்வாசனத்தின் போது செப்பனிடப்படுகிறது. 14. சர்வாங்காசனம் - பெயர் விளக்கம்: சர்வாங்கம் எனும் சொல், சர்வம் + அங்கம் எனப் பிரிந்து, அனைத்து உறுப்புக்கள் என்ற பொருளைத் தருகிறது. இந்த ஆசன இருக்கையில், எல்லா உறுப்புக்களும் தொடர்ந்து, சேர்ந்து செயல்படுவதையே குறித்து நிற்கிறது. பொதுவாக இந்த ஆசனத்தைத் தோள் தாங்கி (Shoulder Stand) என்றும் அழைப் பார்கள். இது யோகிகளின் அறிவார்ந்த, பெரும் திறமைமிகுந்த ஆசன அமைப்பு என்றும்,