பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 73 மனித மூளையின் அரிய கண்டு பிடிப்பு என்றும் புகழ்ந்துரைப்பார்கள். இதனை மேல்நாட்டு எல் வீடிஸ் முறையில் மெழுகுவர்த்திப் பயிற்சி (Candle) என்றும் கூறுகின்றார்கள். செயல் முறை: விரிப்பின் மீது அமர்ந்து, பிறகுகால்களை நீட்டிமல்லாந்துபடுக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்திருக்கவும். சுவாசம் வழக்கம்போல இயல்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கால்கள் இரண்டும் இணையாக இருக்குமாறு வைத்து, மெதுவாக இரு கைகளையும் மேலே | உயர்த்தவேண்டும். கொஞ்சங் கொஞ்சமாக _ இடுப்புப் பகுதி (Trunk) பிறகு மேல் பகுதியை (Hip) உயர்த்தி, முழங்கால்களை மடக்காமல் விறைப்பாக வைத்துக் கொண்டே மேலும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். கழுத்திலும், தோள் பகுதிகளிலும் உடல் எடை முழுவதும் விழுவதுபோல, கால்களை உயர்த்தி நின்று, மோவாயை (Chin) மார்புக் குழிமீது (ஏதாவது இரண்டு தோள் எலும்புகளும் சேருமிடம்) வைத்து அழுத்தவேண்டும். இதற்கு மோவாய் பூட்டு (Chin Lock) என்று பெயர். செங்குத்தாகக் காலை உயர்த்தி இருக்கின்ற பொழுது, கழுத்தின் பின்பாகம், தலையின் பாகம் மற்றும் தோள்களின் பகுதிகள் அனைத்தும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். - குறிப்புக்கள்: இந்த ஆசனத்தை செய்யும் பொழுது உடலை முன்னும் பின்னும் ஆடி அசைக்கக்கூடாது.