பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உயர்த்திய நேரம் முடிந்ததும், உயர்த்திய கால்களை மெதுவாக, அழகுபட, (Elegance) கீழே இறக்க வேண்டும். திடீரென்று ஏற்றி உயர்த்தி இறக்குகின்ற முறை மிகவும் தவறான முறையாகும். இதனை நளினமான முறையிலே செய்வது நிறைந்த பயனை நல்கும் காலை மாலை இரு வேளைகளிலும் இதனைச் செய்யலாம். எண்ணிக்கை 1. மல்லாந்து படுத்திருந்து, கால்களை உயரே உயர்த்தி, கைகளை இடுப்புப் பக்க வாட்டில் பிடித்து செங்குத்தாக உயர்த்துதல். 2. மல்லாந்து படுத்திருத்தல். பயன்கள்: சர்வாங்காசனம் செய்து முடித்த உடனேயே, மத்சியாசனம் செய்வது நல்ல பயனைக் கொடுக்கும். மோவாயை கழுத்துக்குப் பக்கத்தில் அழுத்தும்போது, அருகிலுள்ள தைராய்டு சுரப்பிகளுக்கு இரத்த ஓட்டமானது அதிகம் பாய்ச்சப்படுகிறது. அதனால் தைராய்டு வளம் பெறுகிறது. தைராய்டு வேலையில் குறைந்தால், நோயுறுதல், புத்திமங்குதல், ஞாபக சக்தி குறைதல் போன்ற கெடுதல்கள் உண்டாகும். ஆகவே, தைராய்டு சுரப்பிக்கு நல்ல வளமையை இந்த ஆசனம் அளிக்கிறது. - இரத்த ஓட்டமண்டலம், சுவாச மண்டலம், உணவுக் குழல் மண்டலம், மற்றும் கழிவகற்றும் பகுதிகள் அனைத்தும் சிறப்பாகப் பணியாற்ற உதவுகிறது. மலச்சிக்கல் தீர்கிறது. முதுகுத் தண்டினை வளம்பெற வைக்கிறது. ஜீரண சக்தியை மிகுதிப்படுத்துகிறது. மூல வியாதியைப் போக்குகிறது. பலஹlனமுள்ள இதயமுள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வது உகந்தது அல்ல என்பது பலர் கருத்தாகும்.