பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一款6 பயப்படாதீர்கள்

பண்டிதரிடத்தும் பாமரரிடத்தும், அங்காடியிலும் ஆலயத்திலும் தமிழ் வழங்கின நாள் அது. ஆகவே தமிழுக்கு இலக்கணம் வகுத்த அப்பெரியார் அந்த இடத்திலே வழங்கும் மொழிகளுக்கும் இலக்கணம் அமைப்பது இயல்புதானே?

மற்ற இடங்களில் அதிகமாக வழங்காமல் அங் காடியில் பெருக உபயோகப்படும் வார்த்தைகள் எவை? அங்காடியில் வாங்கும் பண்டங்களே நாம் வீட்டில் உபயோகப்படுத்துகிருேம். அந்தப் பண் டிங்கனின் பெயர்கள் அங்காடியிலும் வீட்டிலும் ஒருங்கே வழங்கப்படுகின்றன. ஆளுல் அதன் அளவும் விலையும் பெரும்பாலும் அங்க்ாடிப் பேச் சாகவே நின்றுவிடுகின்றன. துணி, கஜம் என்ன விலை; நாலு அணுவா? சரி, ஐந்தரை கஜம் கிழித்துக் கொடு’, ரூபாய்க்கு இரண்டு புடி உளுந்து, வேண்டுமானல் வாங்கிக்கொள்ளுங்கள்’, 'பத்துப் வலம் மிளகாய் போதுமா? இன்னும் ஒரு பத்துப் பலம் போடட்டுமா?- இந்த மாதிரி, பண்டத்தையும் அதன் அளவையும் ஒருங்கே, சேர்த்துச் சொல்வதை அங்காடியில்தான் ஒவ்வொரு நிமிஷமும் கேட்கிருேம். *துணி பளபளப்பாக இருக்கிறது’, உளுந்து அப் பளத்திற்கு உபயோகப்படும்’, மிளகாய் மிகவும் பழையது” என்று பண்டத்தின் குணங்களைத்தான் விட்டுப் பேச்சில்ே அதிகமாகக் கேட்கிருேம். . . . . . .

அங்காடிப் பேச்சைக் கவனித்த தொல்காப்பியர் எந்த் எந்தக் கணக்கு எப்படி எப்படித் தமிழர் பேச் சில் மாறி வருகிறதென்பதைச் சொல்கிறர். தொல்