பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பயப்படாதீர்கள்

கிறதோ, அதைப்பற்றி நாம் அதிகமாக மண்டையை

உடைத்துக்கொள்ள வேண்டாம். சாத்தன் தந்தை யைச், சாத்தந்தை? என்றும், கேண்ணன் தந்தை' யைக் கண்ணந்தை என்றும் வழங்குவார்கள்

என்பதை இத்தச் சூத்திரம் தெரிவிக்கிறது. இதை மாத்திரம் நாம் உணர்ந்துகொள்வது போதும்.

ஆந்தை, பூந்தை” என்னும் விசித்திரமான பெயர் களப்பற்றி அடுத்த சூத்திரம் சொல்கிறது;

ஆதனும், பூதனும் கூறிய இயல்பொடு பெயர்ஒற்று அகரம் துவரக் கெடுமுே.

முன் சூத்திரப்படி, ஆதன் தந்தை” என்பது, ஆதந்தை” என்றல்லவா வரவேண்டும்? அது பின்னும் குறைவதை இச்சூத்திரம் சொல்கிறது. ஆந்தை” என்றும், பூந்தை’ என்றும் வருவதற்கு இன்ன மாறு: பாடுகள் நிகழ்கின்றன என்று இது தெரிவிக்கிறது.

தந்தை, மகன் என்ற முறைகளைக் குறிக்கும் இந்த வழக்குகளே இலக்கணத்தின் மூலமாக அறிவ தோடு சில புலவர்களின் பெயர்களேக் கொண்டும் அறியலாம். திருக்காட்டுர்த் தாயங்கண்ணனர் என்று கடைச்சங்க காலத்தில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயரைக் கொண்டு அவருடைய ஊர் திருக் காட்டுரென்று தெரிகிறது; அவர் தகப்பனர் பெயர், தோயன்’ என்று தெரியவருகிறது, கண்ணனர் என் பது அவர் சொந்தப் பெயர் நக்கீரர் என்ற பெயர் பெற்ற புலவருக்குக், கொற்றனர் என்ற குமாரர் இருந்தார். கீரன் மகன் கொற்றன் என்று தெரிந்து கொள்ளும்படி அவர் பெயர், கீரங்கொற்றனர். என்று வழங்கி வந்தது.

. பழங்காலத்துத் தமிழ்ப் பெயர்கள் நமக்கு