பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 4 பயப்படாதீர்கள்

பாவலர் வீற்றி ருக்கும் - .

பாண்டிநன் டுை போற்றி. -

(ஆவியம் தென்றல் - உயிரையும் உதவுகின்ற தென் றல் காற்று. நாவலந்தீவு - பாாதநாடு.)

ஆகவே சங்கத் தமிழ் என்பது தமிழின் உயர்வை யும், தமிழ்ப் புலவர்களுடைய ஒழுக்கச் சிறப்பையும், அவாகளுக்குள்ளே இருந்த ஒற்றுமையையும், அவர்க ளது கூட்டு முயற்சியில்ை விளைந்த நன்மைகளையும் குறிப்பதற்கு அடையாளத் தொடராக விளங்கு கின்றது.

சங்கப் புலவர்கள் அறிவானே செலுத்தினர்கள் என்ருல் அது எளிதான காரியம் அன்று. வெறும் கல்வியினுல் மாத்திரம் அந்த நிலை வந்துவிடாது. அகத்தியர், தொல்காப்பியர் முதலிய புலவர்கள் எல்லாம் புலன்களே அடக்கித் தவம் புரிந்த ஞானிகள் . கபிலர் என்ற புலவர் 'புலன் அழுக் கற்ற அந்தணு எர். பிற்காலத்தில் திருநெறித் தமிழையும் திவ்யத் தமிழையும் பரப்பியவர்கள் நாயன்மார்களும் ஆழ் வார்களும் ஆவார்கள். அவர்கள் அருட் புலவர்கள்; தெய்வத் திருவருளாலே தமிழை வளர்த்தவர்கள்.

இப்படி ஒழுக்கமும் புலமையும், பருந்தும் நிழலும் போல் ஒன்றுபட்டுத் திகழ்ந்த வாழ்க்கையையுடைய புலவர்களைத் தமிழர் அனைவரும் வழிபட்டு அவர்கள் வாய்மொழியை வேதமாகக் கொண்டு படித்து இன் புற்றர்கள் என்பது என்ன ஆச்சரியம்?