பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தலைச் சங்கம்

“மன்னும் இமய மலை எங்கள் மலேயே’ என்று தாம் பாரதியாருடைய பாட்டை முழக்கிக் கொண்டே பாரத சமுதாயத்தை வாழ்த்துகிருேம். அந்தப் பெரிய இமயமலையானது ஒரு காலத்தில் இல்லாமலே இருந்தது என்று நில இயல்பு நூல்: வல்லார் தெரிவிக்கிருர்கள். பூமிதேவியின் திருமேனி அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருக்கின்றதாம். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய மாறுபாடுகள் நிகழ்கின்றன. கடல் இருந்தவிடத்து மலேயும் Imඨිඨා இருந்தவிடத்துக் கடலும் தோன்றுகின்றன. இமயமலே உள்ள இடத் தில் முன்பு கடலிருந்தது என்று ஆராய்ச்சியாளர் சொன்னல் நாம் வியப்படைகிருேம். -

தமிழ் நூல்களால் இத்தகைய நிலப் புரட்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. கன்னியாகுமரி என்ற கடல் துறையை நாம் தமிழ் நாட்டின் தெற் கெல்லையாக வைத்துக்கொண் டிருக்கிருேம். அதற் கும் தெற்கே பல மலேகளும் ஆறுகளும் கொண்ட நிலப்பரப்பு முன் காலத்தில் இருந்ததாம். தென்னப் பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு பரந்த நிலப்பரப்பு இருந்ததாகச் சொல்லி அதனை லெமூரியாக் கண்டம் என்று சில ஆராய்ச்சியாளர்

குறிக்கின்றனர். அது எப்படியாலுைம். தமிழ் நூல்