பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பயப்படாதீர்கள்

களின் சாட்சியைக் கொண்டே, தமிழன் தனக்குரிய நாட்டின் ஒரு பகுதியை வருண பகவானுக்கு நிவேத னம் செய்துவிட்டான் என்பதை அறியலாம். இப் பொழுது கன்னியாகுமரி இருக்குமிடத்திற்குத் தெற்கே குமரியாறு, குமரிமலே, பஃறுளியாறு எனப் பல நிலப் பகுதிகள் இருந்தனவாம். சிலப்பதிகாரத்தில் உள்ள, 'பஃறுளி யாற்றுடன் பன்மலே அடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கெள்ள’ என்ற பகுதி யிகுல் இது தெரியவருகிறது. பன்மலை அடுக்கம் என்பதல்ை பல மலகள் அந்தப் பரப்பில் இருந்தன என்று அறிகிருேம். -

சிலப்பாதிகாரத்திலுள்ள அப்பகுதி பாண்டியனைப் பற்றிச் சொல்வது. பாண்டியருக்குள் மிகப் பழங் காலத்தில், கடல் வடிம்புலம்ப நின்ற பாண்டியன்' என்று ஒருவன் இருந்தான். அவன் சமுத்திரத்தை வேல் கொண்டு எறிந்தாகவும் அதல்ை கடல் அவன் அடி பணிந்ததாகவும், அதுபற்றி அவனுக்கு அப்பெயர் வந்ததாகவும் கூறுவர் புராணக் கதையாகவுள்ள இச் செய்திய்ால் ஒர் உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பரந்த நிலப் பரப்பைத் தனக்குரியதாக்கி ஆண்டுகொண்டிருந்த பாண்டியன், கடற் பரப்பை யும் தன்னுடைய ஆணேக்குள் வைக்கவேண்டும் என்று நினைத்தான். கலங்களேச் செலுத்திக் கடலின் ஒரு பகுதியை அளவிட்டுத் தனக்குரிமையாக்கிக் கொண்டான். அவன் தன்னுடைய ஆணேயில்ை அளந்ததை உபசாரமாகத் தன் அடியால் அந்தான் என்று புலவர்கள் சொன்னர்கள். அரசனது தாள் நிழலின்கீழ்க் குடிமக்கள் அடங்கி நிற்பர் என்னும் சம்பிரதாய வார்த்தைகளைப் பின்பற்றிப் புலவர்கள்