பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைச் சங்கம் 17

அவ்வாறு பாராட்டினர்கள். அதுகாறும் அளவு தெரியாத கடலின் அளவைத் தன்னுடைய ஆணேயி ல்ை-அடியினல்-அளந்து அறிந்து, எல்லா அரசர் களும் இதுவும் அளவிற்குள் பட்டது என்று உணரும் படி அவ்வரசன் செய்தாளும். இதனே, 'அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த’ பராக்கிரமமாகச் சிலப்பதிகாரம் சொல்லுகிறது.

இப்படி ஒரு காலத்தில் தன்னே அளந்துகாட்டிய பழியைப் போக்கிக் கொள்ளக் கடல் நி&னத்ததாம். பின்னுெரு காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியை அது விழுங்கிப் பழிக்குப் பழி வாங்கிய தா.ம.

'வடிவேல் எறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள:

என்று புலவர் சமத்காரமாகச் சொல்லுகிருர். கடல் கொண்ட பிரதேசத்தில் பஃறுளி என்ற ஆறும், குமரி மலேயென்னும் மலேயும் மிகத் தலைமை

பெற்று இருந்தன. பிற்காலத்துப் பாண்டியரில் ஒருவன் இந்த நஷ்டத்தைப் போக்குவதற்காக வட நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று கங்கையை

யும் இமாசலத்தையும் தன்னுடையனவாக ஆக்கிக் கொண்டானும். * * -

தமிழ் வள்ர்த்தவர்கள் பாண்டியர்கள். பாண்டி யர்களுக்கு எங்கெங்கே அரசிருக்கை நகரங்கள் அமைந்தனவோ அங்கங்கே தமிழரசிக்கும் செங் கோல் செலுத்தும் ஆஸ்தானம் அமைந்தது. பாண்டி யர்கள் கடல்கொண்ட பிரதேசத்திலிருந்து ஆண்டு வந்தார்களாம், மிகப் பழங்காலத்தில் அந்தத் தென்

பய - 2: