பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பயப்படாதீர்கள்

குட்டில் மதுரை என்று ஒரு நகரம் இருந்தது. அதில் வாழ்ந்திருந்த பாண்டியர்கள் தமிழ்ப் புலவர்களே எல்லாம் ஆதரித்து அவர்களைக் கூட்டிச் சங்கத்தை நிறுவினர்கள். அதற்குத் தலைச்சங்கம் என்று பெயர். எண்பத்தொன்பது பாண்டிய அரசர்கள் . ஒருவர்பின் ஒருவராக அந்தச் சங்கத்தைக் காப்பாற்றி வந்தார்க ளாம். சங்கத்தில் நிரந்தர அங்கத்தினர்களாகப் பல புலவர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டின் பல வேறு இடங்களிலுள்ள பல கலப் புலவர்கள் பாடல்களே இயற்றிவந்து அந்தச் சங்கத்தில் அரங்கேற்றுவார் கள். அரங்கேற்றப்பட்ட கவிதைகளே யெல்லாம் தமிழ் நாட்டார் அனுபவித்து இன்புறுவார்கள். புலவர் கூட்டத்தை யாதொரு குறைவும் இன்றிப் பாதுகாத்துவந்த பாண்டியர்களுக்குள் சிலர் தாமே சிறந்த புலவர்களாகவும் இருந்தார்கள்.

சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களோடு சிவபெரு மான் முதலிய கடவுளர்களும் சேர்ந்து சங்கப் புலவர் களாக விளங்கினர்களென்று கதை சொல்லுகிறது, மரியாதைக்காகவோ, உண்மையில் அக்காலத்திருந்த தெய்வத் திறேைலா அவர்களுக்குச் சில இடங்கள் இருந்தன என்று தெரிகிறது. -

அகத்தியர் தலைச்சங்கத்தில் இருந்த புலவர்களுள் தல சிறந்தவர். அவர் இயற்றிய அகத்தியம் என்ற இலக்கணமே அந்தக் காலத்துத் தமிழ் மொழிக்குரிய சட்டம். சிவபெருமானும் முருகக் கடவுளும் குபேர தும் சங்கப் புலவர்களாக இருந்தார்களென்று பழங் கதை சொல்லுகிறது. இப்படி ஐந்நூறு நாற்பத் தொன்பது பேர்கள் சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்களும் பிற புலவர்களும் பல பாடல்களைப் பாடி