பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் 21

ஒன்றும் விளங்கவில்லை. பூமி தட்டழிந்து வடதிசை உயர்வதற்கு அகத்தியர் என்ன செய்ய முடியும்? என்று மயங்கினர். அந்தக் குறுமுனிவர், உருவத் தால் குறுகியவராக இருப்பினும் தவத்தால் இமா சலத்தையும் விடப் பெரியவர் என்பதைத் தேவர்கள் உணரவில்லை.

சிவபிரான் கட்டளையைக் கேட்ட அகத்தியர், திேருமண வைபவத்தைப் பார்க்கும் பேறு எனக்கு இல்லே போலும்!’ என்று சிறிது வருந்தியபொழுது, தெற்கே தமிழ் நாட்டில் நீ சென்று தங்குவாயாக. அங்கே திருமணக் கோலத்தைக் காட்டுவோம்’ என்று அருளிச் செய்தார். : -

நோன் போகும் இடம் தமிழ் நாடாயிற்றே. தமிழ் மொழியில் எனக்கு வன்மை இல்லையே! ஒரு நாட்டிற்குச் சென்று. அந்ந நாட்டு மொழி தெரியா மல் வாழ்வது எவ்வாறு?’ என்று அகத்தியர் கேட் டார்.

உடனே சிவபெருமான் அம்முனிவருக்குத் தமிழை உபதேசித்தார். தவத்தால் மெய்யறிவு பெற்ற முனிவர் தமிழை நன்கு தெரிந்துகொண்டு

தென்னட்டுக்கு வந்து சேர்ந்தார். தாமிரபர்ணி தீரத்தில் சந்தனப் பொழிலும் தென்றலும் நில்வும் பொதிய மலேக்குச் சென்று அதனைத் தம் இருப்பிட மாகக் கொண்டார். அவர் அங்கே சென்று இருந்த மையால் பூமியின் பாரம் சமமாகி விட்டதாம். பொதி யில் மலே அடிவாரத்தில் உள்ள பாபநாசம் என்னும் தலத்தில் சிவபெருமான் தம் கல்யாணத் திருக்கோலத் தைக் காட்ட அகத்தியர் தரிசித்து இன்புற்ருரென்று புராணம் கூறுகிறது. . -