பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் 雾8,

கள் ஆராய்ச்சி செய்து பாடம் கேட்டார்கள். நாள டைவில் தென்டுை முழுவதும், அகத்தியர் பல மாணு க் கர்களுக்குப் பாடஞ் சொல்லிவரும் செய்தி பரவி - -- اه تي لاة

அகத்தியர் தமிழுக்கு ஓர் இலக்கணம் இயற்றி ர்ை. அதை அகத்தியம் என்று சொல்வார்கள். அந்த இலக்கண நூல் தமிழ்நாடு முழுவதும் பரவிப் புகழ் பெற்றது. அதுகாறும் மூன்று தமிழுக்கும் வரை யறையாக ஓர் இலக்கண நூல் இருக்கவில்லை போலும்! இயல், இசை, நாடகம் என்னும் மூன்று வகைத் தமிழுக்கும் உரிய விரிவான இலக்கணமாக அமைந்தது அகத்தியம் என்னும் நூல்.

பொதியமலை, பல புலவர்கள் தங்கித் தமிழ் ஆரா யும் இடமாகி விட்டது. இதனே அறிந்த பாண்டிய அரசன் அகத்திய முனிவரை வந்து தரிசித்தான். அக் காலத்தில் கன்னியா குமரிக்கும் தெற்கே இருந்த மதுரையில் அவன் இருந்து ஆண்டு வந்தான். அகத் திய முனிவருடைய உதவியால் தன்னுடைய தலைநக ரத்தில் ஒரு சங்கத்தை நிறுவ வேண்டுமென்று அவாவிய பாண்டியன் தன் கருத்தை மூனிவரிடம் தெரிவித்துக் கொண்டான். அவருடைய ஆசியுடன் தமிழ்ச்சங்கம் ஆரம்பமாயிற்சி. அதுதான் தலைச்சங் கம். அச்சங்கத்தில் அகத்தியர் இயற்றிய அகத்தி யமே இலக்கணமாகக் கொள்ளப்பட்டது. -

பல ஆண்டுகள் கடந்தன. தலைச்சங்கம் இருந்த மதுரையைக் கடல் கொண்டது. அப்பொழுது பாண் டியர்கள் தங்கள் தலை நகரத்தை வடக்கே தள்ளி வைத்துக் கொண்டார்கள். அதுவும் கன்னியா கும ரிக்குத் தெற்கே இருந்ததுதான். அதற்குக் கபா