பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பயப்படாதீர்கள்:

கள். இவ்வகை இலக்கணங்கள் பிற்காலத்தில் உண் டாயின. எதையும் பழைய மனிதர்கள் தலையில் போட்டால் அதற்கு ஒரு கெளரவம் உண்டாகி விடு வது இந்த நாட்டு வழக்கம். ஆகவே அகத்தியர் ஒரு பாட்டியலே இயற்றியதாக ஒரு கட்டுக் கதையும், அதன் விளைவாக ஒரு பாட்டியல் நூலும் இந்த நாட் டில் எழுந்தன. அந்த நூலப் பார்த்த சில அறிஞர் கள், அட பாவமே அகத்தியர் தலையில் இதையுமா சுமத்த வேண்டும்? என்று தலையில் அடித்துக்

கொண்டார்கள். தொல்காப்பியத்துக்கு உரை எழு திய பேராசிரியர் என்னும் பெரியார், அகத்தியர் பாட்டியல் இயற்றிெைரன்று சொல்வது தவறு.

என்று கண்டிக்கிருர்.

இலக்கியத்திலிருந்து வைத்தியத்துக்கு அகத்தி யரை இழுத்துப்போய் அவர் தலையில் கணக்கற்ற முட்டைகளைச் சுமத்தியிருக்கிருர்கள், சித்த வைத்தி யத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். மிகவும் அருமையான உண்மைகளைக் கண்டுபிடித்தவர்கள் அவற்றைத் தம் பெயரால் வெளியிடுவதை விரும்பாமல், அகத்தியர் இயற்றியனவென்று போட்டு விட்டார்கள். நூலில் உள்ள பொருள்கள் மிகவும் சிறந்தவை; ஆகையால் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி இல்லாதவர்கள் அதை நம்பிவிட்டார்கள். அகத்தியர் பெயரால் வழங்கும் சித்த வைத்திய நூல்கள் பல, அவருடைய பெயரோடு சார்த்தி அவற்றை உலகில் வழங்கச் செய்த பெரி யார்கள் ஒரு விதத்தில் நல்ல நோக்கத்தோடு அந்தக் காரியத்தைச் செய்தாலும், பிற்காலத்தில் சரித்திர உணர்ச்சிக்கு மாறுபட்டு, அகத்தியர் என்று ஒரு பேர்வழி இருந்தாரா? இல்லையா? என்றே சந்தேகம்