பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பயப்படதீர்கள்

நாட்டில் கதை ப்டர்ந்தது; புத்தகத்தின் மதிப்பும் உயர்ந்தது. கதை இதுதான்: r • ኣ♥

சிவாலய தேவர் என்னும் பக்தர் ஒருவர் தேவா ரத்தில் மிகவும் ஈடுபாடுடையவர். தினந்தோறும் தேவாரப் பதிகங்களை அடிமுதல் இறுதிவரையில் பாராயணம் செய்வதையே விரதமாகக் கொண்டிருந்: தார். இந்தப் பாராயணத்தால் வேறு வேலே ஒன்றை யும் கவனிக்க முடியாமற் போயிற்று. தேவார பாரா யணத்தை விடவும் மனமில்லை. இந்த திலேயில் ஒரு நாள் அகத்திய முனிவர் அவர்முன் பிரசன்னமானர். சிவாலய தேவர் அவரை வணங்கி வாழ்த்திய பிறகு தேவார பாராயண்த்தைப்பற்றிச் சொல்லித் தம் சங்கடமான நிலையையும் தெரிவித்தார். உடனே அகத்தியர் மனமுவந்து தேவாரத்தில் தலமைபெற்ற இருபத்தைந்து பதிகங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு முறைப்படுத்தித் திரட்டித் தந்து, "இவற்றைப் பாராயணம் செய்தால் தேவாரம் முழுவதையும் , பாராயணம் செய்த பயனைப் பெறலாம்’ என்று. சொல்லிச் சென்றாாம். அதுமுதல் அந்தத் திரட் டையே சிவலாய தேவர் பாராயணம் செய்யலானர். அகத்தியரால் திரட்டப் பெற்றதாதலின், அகத்தியத் தேவாரத் திரட்டு என்ற பெயர் அதற்கு ஏற்பட்டது,

கதை நன்ருகத்தான் இருக்கிறது. அகத்தியர் காலம் எது? தேவாரம் பாடிய மூவர் காலங்கன் எவை? முதலிய கேள்விகளைச் சரித்திரக்காரர்கள் எழுப்பில்ை, அகத்தியர் தெய்வ முனிவர்; எந்தக் காலத்திலும் இருப்பார்; எந்த நடையிலும் பாடு. வார்; அவர் ஒரு பெரிய சித்தர்’ என்று பதில் சொல்லும் காலம் போய்விட்டது.