பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பயப்படாதீர்பள்

இலக்கணத்தைச் சொல்லின் இலக்கணத்தோடு கலந்து சொல்லி யிருந்தார். முதல் முதலில் நூல் செய் தால் அந்த மாதிரியான குறைபாடுகள் இருப்பது இயல்புதான். நாளடைவில் பலருடைய முயற்சி யினுல்தான் நல்ல ஒழுங்குமுறை ஏற்படும்.

தொல்காப்பியர், கூடியவரையில் இலக்கணங் கள் ஒன்ருேடொன்று கலவாமல் அந்த அந்தப் பகுதி யில், அமையும்படி நூலே இயற்றினர். தம் காலத்தி லும் அதற்கு முன்பும் புெரிய்ோர்கள் செய்திருந்த இலக்கியங்களை யெல்லாம் . நன்ருக ஆராய்ந்தார். அவற்றில் கண்ட மரபுகளை யெல்லாம் உணர்ந்து தம் இலக்கண நூலில் அமைத்துக்கொண்டார்.

அறிவும் ஆற்றலும் தவ விரதமும் உடைய அவ. ருடைய முயற்சி மிகச் சிறப்பாக நிறைவேறியது. தொல்காப்பிய மென்னும் இலக்கணத்தை அவர் இயற்றி முடித்தார். அந்தக் காலத்தில் யார் எந்த நூல் இயற்றிலுைம் அதை அறிஞர்கள் கூடிய சபை யில் அரங்கேற்றுவது வழக்கம். அப்படிச் செய்யா விட்டால் அந்த நூலைத் தமிழ்நாட்டார் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பாண்டியன் மாகீர்த்தி என்பவன் தமிழ்நாட்டை ஆண்டுவந்த காலம் அது. அவன் முன்னிலையில் தக்க பெரியார் ஒருவருடைய தலைமையில் தொல்காப்பி யத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற ஏற்பாட்டைப் புலவர்களும் பிறரும் செய்யலாயினர். அரங்கேற்றத் தில் தலைமை வகிக்க, நியாயமாக அகத்தியர் வர வேண்டும். தொல்காப்பியர் மேல் சினம் பூண்ட அவர் எங்கே வரப்போகிறர்?. ஆகவே அக்காலத்தில் அவருக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற பெரியார்.