பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர் - 39

ஒருவர் அதங்கோடு என்ற ஊரில் இருந்தார். அவர் அந்தணர் என்று தெரிகிறதே யொழிய அவருடைய மெயர் இன்னதென்று தெரியவில்லே. அவரைக் கொண்டு அரங்கேற்றத்தை நடத்துவதாக ஏற்பாடு

ஆகிவிட்டது. r

இந்த விஷயம் அகத்தியர் காதுக்கு எட்டியது. "அப்படியா சமாசாரம்? இவன் இலக்கணம் செய்வ தையும், அரககேற்ண்ம் நடைபெறுவதையும் பார்த்து விடுகிறேன்’ என்று சினம் மூண்டு , கர்ஜித்தார். அதை, அரங்கேற்றக் கூடாதென்று அதங்கோட்டு ஆசானுக்குத் தெரிவித்தார். பாவம்! அந்தப் பெரிய வர் தர்மசங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டார். அரசன் அரங்கேற்றச் சொல்கிருன், அகத்தியர் வேண்டா மென்கிறர். இந்த நிலமையில் என்ன செய்வதென்று விளங்காமல் அவர் தத்தளித்தார். கடைசியில் அகத்தியருக்கு ஒரு வகையாகச் சமா தானம் சொன்னர். அரங்கேற்றுவதைத் தடுக்க வேண்டாம். ஆல்ை நான் அந்த நூலுக்குக் குற்றத் தின்மேற் குற்றம் சொல்லி அவரைச் சக்ளிக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டார். -

அரங்கேற்றம் நடைபெற்றது. அதங்கோட்டு ஆசிரியர் இடையிடையே மிகவும் நுணுகிய கேள்வி களேக் கேட்டார்; குற்றமென்று . அவற்றைச் சொன்னர். தொல்காப்பியர் அவற்றிற் கெல்லாம் தக்க விடைகளைக் கூறினர். அதங்கோட்டு ஆசிரி யரே வியக்கும்படியாக இருந்தன அவர் கூறிய சமா தானங்கள். * . . ; . .

தமிழ்நாடு முழுவதும் குருவுக்கு மிஞ்சிய சிஷ்ய