பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பயப்படாதீர்கள்

ராகிய தொல்காப்பிய முனிவரின் பெருமையை நன்கு உணர்ந்து கொண்டது. தொல்காப்பிய மென்னும் இலக்கணம் தமிழர் உள்ளத்தைக் கவர்ந்தது. அது காறும் அத்தனை ஒழுங்கான முறையில் ஓர் இலக்கண நூல் தமிழ்நாட்டில் வழங்காமையால் தொல்காப்பி யத்தின் மதிப்புப் பன்மடங்கு அதிகமாயிற்று. இடைச் சங்கப் புலவர்கள் அகத்தியத்தோடு அதனையும் தங்க ளுக்கு உரிய இலக்கணமாகக் கொண்டார்கள்.

நாளடைவில் அகத்தியத்தைப் பயில்பவர் குறைந் தனர். தொல்காப்பியமே புலவருக்கு ஆதார நூலாகி விட்டது. தொல்காப்பியன்றன், ஆணையில் தமிழ் நூல், அறிந்தோர்க்குக் கடனே' என்று. ஒரு புலவர் சொல்கிருர். தமிழ் உலகத்தில் இலக்கிய இலக்கண அரசாட்சியில் தொல்காப்பியருடைய ஆணே புலவுச் களால் அன்புடன் போற்றிக் கொள்ளப்பட்டது. அவர் செலுத்திய ஆணேக்குப் பணிந்து ஒழுகினர் பெரியோர். அந்த ஆணேவடிவா.ெ இருப்பதுதான் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். -

குருவுக்கு மிஞ்சிய புகழைப் பெற்ற தொல்காப்பி யர் நூல் இன்றளவும் சிறந்ததாகவும் இணையற்றதாக வும். தமிழ் மொழிக்கு மேல்வரிச் சட்டமாகவும் விளங்குகின்றது. - * * t