பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4灣 பயப்படாதீர்கள்

தவர்களும் மானக்கர்களை அளவுக்கு மிஞ்சிப் பய முறுத்திவிட்டார்கள். பொது மக்களும் அதில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளத் துணியா மல் அஞ்சி நடுங்கித் தூரவைத்துத் தொழுது வருகிறர் கள். இது உண்மையில் இரங்கத்தக்க விஷயம். மிகவும் சிக்கலான சட்ட நுணுக்கங்களையும் அரிய நுண்ணிய கணித விஷயங்களேயும் சிக்கறுத்துத் தெளிய வைக்கும் தமிழர்களுக்கு, இலக்கணம் ஒரு பூச்சாண்டியாக இருப்பதென்ருல், குற்றம் இலக் ه. கணத்திலில்லே. நம்முடைய அசட்டையோ அநாவசிய மான பயமோதான் அந்தக் குற்றத்துக்குக் காரணம்.

இலக்கணத்தைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. மொழி ஜிவநதி போன்றது. தமிழோ என்றும் ஜீவனுடன் ததும்பும் பெரிய இறு. இடையருது புனல் பரந்து பூம்பொழிலையும் É: #ffff;" வயலேயும் செழிக்க வைக்கும் ஆறு அது அந்த நதிக் குக் கரைபோல இருப்பது இலக்கணம். இயற்கை iான அழகைத் தடைப்படுத்திச் சிறையிடுவது இலக் கணத்தின் செயலல்ல. இயற்கையாக வரும் வெள்' எத்தை ஒழுங்குபடுத்தி யாவருக்கும் பயன்படுத்தும் கரையைப்போல, ஆன்ருேர் வகுத்த நெறி இன்ன தேன்று அறிவித்துப் பின்னல் வருபவர்களுக்குப் பல சைளகரியங்களைச் செய்து கொடுக்கும் வழிகாட்டி போன்றது. அது. அந்தக் கரையைக் காரணமில்லாமல் உடைப்பதோ, நீரே தெரியாமல். மலேயைப்போல் உயர்த்தி மனித முயற்சியை விணுக்குவதோ கூடாது. காலத்தின் - மாறுபாட்டால் உடைந்த பகுதிகளேப் புதிய மண்ணில்ை அடைத்துச் செப்பஞ் செய்வது போல, இலக்கணக் கரையிலும் புதிய புதிய அமைப்