பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயப்ப்டாதீர்கள் 49

புக்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு இலக் கணம் இடம் கொடுக்கிறது. இலக்கணம் வளர்ந்து வந்த விதத்தை அறிந்தால் நாளுக்கு நாள் அது எப்படிக் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டே வந்திருக்கிறதென்பதை உணரலாம்.

இலக்கணக் கரையை உடைத்தெறிவது பெரிய காரியமல்ல. சில இடங்களில் உடைப்பது அவசிய மாகவும் இருக்கலாம். ஆற்றின் வெள்ள நிலை, காலத் தால் ஏற்பட்ட மாறுபாடுகள், கரையின் அமைப்பு ஆகிய எல்லாவற்றையும் நன்கு அறிந்த இஞ்சினியர்களே மராமத்து வேலே பார்க்கத் தகுதியுடையவர்கள். கட்டபாரையும் கரண்டியும் உடையவர்களெல்லாம் கரையைச் செப்பஞ் செய்வதென்று வந்தால், கரை யும் இராது; ஆறும் இராது; அழகான ஆற்றைக் காடப்ாந்றைப் போன்ற நிலேக்குத்தான் , கொண்டு வரும்படி நேரும்.

எவ்வளவோ விஷயங்கள் இலக்கணத்தில் புதிது புதிதாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு புதிய விதியை இலக்கணத்தில் சேர்க்கவேண்டும், பழையதை அகற்றவேண்டும் என்ருல் அதற்கு இலக் கணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் இடம் வைத்திருக் கிருர்கள்.

இல்லையானல் மொழி வளராது. தொல்காப் பியர் காலத்திலே இருந்தமாதிரி இன்று தமிழ் மொழி இருக்கவில்லை. எவ்வளவோ மாறியிருக்கிறது. தொல்காப்பியரே இன்று தமிழ் நாட்டுக்கு வந்தால் இன்றுள்ள பல வார்த்தைகளும் பல அமைப்புகளும் அவருக்கு விளங்கா.

இலக்கணத்தில் மொழியைப் பற்றிய நுணுக்க ப.ய 4