பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

தொல்காப்பியத்தின் முகவுரை

இந்தக் காலத்தில் அநேகம்ாகப் புத்தகங் களுக்கு முகவுரை எழுதும் வழக்கத்தை விடாமல் ஆசிரியர்கள் கடைப்பிடிக்கிருர்கள். ஆசிரியர்களே

முகவுரை எழுதுவார்கள்; அல்லது வேறு சிறந்த அறிஞர்கள் எழுதுவதும் உண்டு.

புத்தக வெளியீடு ஒரு கலேயாகி விட்ட இந்தக் காலத்தில்தான் முகவுரை எழுதும் வழக்கம் புதி தாக வந்தது என்று நினைக்க இடமில்லே. தமிழ் நூல் களேப் பொறுத்த வ்ரையில் இந்த வழக்கம் மிகப் பழைய தென்றெ சொல்ல வேண்டும். முகவுரை இல்லாத புத்தகம் முகம் இல்லாத உடம்புக்குச் சமானம்’ என்று தமிழர் எண்ணினர். மாட மாளி கைகளுக்குச் சித்திரங்கள் எவ்வளவு அவசியமோ, கோயிலுக்குக் கோபுரம் எவ்வளவு அவசியுமோ மட மங்கையருக்கு ஆபரணம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் நூலுக்கு முகவுரை. முகவுரை யின் இலக்கணத்தைப் பற்றியும், இலக்கண நூல்கள் சொல்லுகின்றன. - -

முகவுரை, நூலுக்கு முகத்தைப் போன்றது; நூலேயும் நூலாசிரியரையும் அறிமுகப்படுத்துவது; இன்ன தகுதியுடையவர்களே - குறிப்பிட்ட் நூலேப் படிக்க வேண்டும் என்று கூறுவது.