பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பயப்படாதீர்கள்

நூலாசிரியன் தன் பெருமையைத் தானே சொல்லிக் கொள்ளலாமா? அது தற்புகழ்ச்சியாகி விடுமே. ஆகையால் நூலாசிரியனே நன்கு தெரிந்தவரே முகவுரை எழுதுவது சிறப்பென்று பழைய இலக் கணம் சொல்லுகிறது. ஆயிரவ ைகயில்ை அழகிய நூல் ஒன்றை ஒரு புலவன் இயற்றிலுைம் பிற அறிஞன் அந்நூலுக்கு ஒரு முகவுரை எழுதி அறிமுகப்படுத்தா விட்டால் அது நூலாகாது’ என்று ஒரு சூத்திரம் அறிவிக்கிறது. -

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே!

பிறர் எழுதும் இந்த முகவுரைக்குச் சிறப்புப் பாயிரம் என்று பெயர். நூலாசிரியனேப்பற்றியும், அவனுடைய தகுதியைப்பற்றியும், நூலின் சிறப்பு, பொருள், அதனே இயற்ற நேர்ந்த காாணம் இவற். றைப்பற்றியும் உள்ள் செய்திகளே முகவுரை புலப் 'படுத்த வேண்டும், ஆனல் பிற்காலத்தில் எழுந்த சிற்ப்புப் பாயிரங்களெல்லாம், படிப்ப்வர்களுக்கு வேண்டிய செய்திகளைத் தெரிவிக்காமல், ஆசிரியனே வானளாவப் புகழும் துதிமாலைகள் ஆகிவிட்டன. பல சிறப்புப் பாயிரங்களில் நூல்களில் இன்ன விஷயம் உளதென்ப்தே சொல்லப் பெறுவதில்லை. இந்தக் காலத்துப் பத்திரிகைகளில் வரும் மதிப்புரைகளைப் போலச் சிறப்புப்பாயிரங்கள் எழுந்தன.

* > . தொல்காப்பியத்துக்கு ஒரு முகவுரை, சிறப்புப்

பாயிரம், இருக்கிறது. அது முகவுரையின் இலக்கணங் . கள் அமைந்தது. தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பானுர் என்னும் புலவர் இயற்றியது அது; அந்தக் காலத்து வழக்கப்படி பாட்டாகவே இருக்