பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்தின் முகவுரை $5

கிறது. அந்த முகவுரையிலிருந்து தமிழ் மொழியின் சரித்திரத்திற்குப் ப்யன்படும் செய்திகள் சில வெளி யாகின்றன.

பழங்காலத்தில் பாரதநாடு முழுவதும் உள்ளப் பண்பினுல் ஒன்றியிருந்தாலும், நாட்டுப்பிரிவுகள் மொழி காரணமாக அமைந்திருந்தன. ஒவ்வொரு மொழியைப் பேசும் நிலப்பகுதியினரும் தனி நாட்டின ராகப் பிரிந்து நின்றனர். ஒழுக்கம், தெய்வம் கொள்கை, உறுதிப்பொருள் முதலிய விஷயங்களில் இமயமுதல் குமரிவரையில் ஒருமைப்பாடு இருந்தது. ஆகுல் உடை, உணவு, மொழி என்பவற்றில் வேற்றுமை உண்டு.

மொழி வேற்றுமையால் உண்டான நாட்டுப் பிரிவின்படி, நாம் வாழும் நாடு தமிழ்நாடு ஆயிற்று. இதனைப் பன்ம்பாரளுர் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று சொல்லுகிருர். இதன் எல்லே என்ன? வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்கு இரண்டு திக்கிலும் கடல்களும் ஆக அமைந்த நிலப்பரப்பே தொல்காப்பியர் காலத்துத் தமிழ் நாடு. பனம்பாரனுர் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள எல்.ேகளே அவசியம் இல்லேயென்று கூறவில்லே. தமிழ்நாட்டுக் குப் புறம்பே அந்தத் திசைகளில் மக்கள் வாழும் நாடு இல்ல; கடல்களே உள்ளன. இமாலயத்துக்கு வடக்கும், குமரியாற்றுக்குத் தெற்கும் மக்கள் வ்ாழ்ந் த்னர். ஆதலின் அந்தத் திசைகளில் எல்லேயை வரையறுத்துச் சொல்லவேண்டியது அவசியமா யிற்று.

தமிழ் பேசும் நாட்டில் வழங்கும். இலக் கண நூல் தொல்காப்பியம். எதற்கு இலக்கணம்?