பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பயப்படாதீர்கள்

தமிழ்மொழிக்கு. தமிழ்மொழி என்பது எங்கே எந்த உருவத்தில் இருக்கிறது? நூல் உருவத்தில் இருப்பது தான் தமிழ்; மக்கள் பேசுவது இலக்கியம் ஆகாது? என்ற கட்சி ஒன்று இன்றும் இருக்கிறது. இலக் கணம் என்பது இலக்கியத்தின் இயல்பைச் சொல் வது. தொல்காப்பியர் எவற்றை இலக்கியமென்று நினேத்தார்? புலவர்க்ள் இயற்றிய நூல்களே மாத்திரம் இலக்கியவென்று எண்ணி, அவற்றில் உள்ள மரபு களே இலக்கணமாக அமைத்தால், அந்த நூல் தமிழ் மொழிக்கே இலக்கணமென்று சொல்வது பொருந் திTது.

தொல்காப்பியர் இலக்கணம் செய்வதற்கு முந்திப் பெரிய ஆராய்ச்சி ஒன்றைச் செய்தார். தமிழ் மக்க ளிடத்தில் உயிரோடு உலவுவது தமிழ்மொழி. அப்தப் பேச்சு வழக்கைத்தான் அவர் முதலிலே கவனித்தார். பிறகு நூல்களே ஆராய்ந்தார். அவருக்கு முன் இருந்த இலக்கணங்களையும் ஆராய்ச்சி செய்தார். எல்லாவற்றையும் நிதரினமாக ஆராய்ந்த பிறகு அவசி யம் தமிழ் மொழிக்குப் புதிய முறையில் ஓர் இலக் கணம் வகுக்கவேண்டும் என்ற உறுதியைக் கொண் ”翼一邵T“

வடக்கே - வேங்கடத்தையும் தெற்கே குமரி யாற்றையும் எல்லேயாகக் கொண்டு இவற்றினிடையே உள்ள தமிழ் பேசும் நாட்டில் பேச்சுவழக்கும் நூல் வழக்குமாகிய இரண்டு மூலப்பொருள்களிலும் உள்ள எழுத்து, சொல், பொருள் என்பவற்றை ஆராய்ந்து, செந்தமிழ் நாட்டில் முன்பே உள்ள இலக்கண நூல்கன்யும் உணர்ந்து, எல்லாவற்றிலும் அமைந்த

சய்திகளை முறையாகச் சிந்தித்து, குற்றமற்ற இந்த்.