பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:58 பயப்படாதீர்கள்

வளவுதான். அதுபோலத் தமிழ்மொழியின் இயல்பு களேத் தாம் அறிந்து அவற்றை முறைப்படுத்தி நமக் குச் சொல்கிறர் தொல்காப்பியர்.

உலகவழக்குக்கும் இலக்கணம் தொல்காப்பியத் தில் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான செய்தி.

எழுதப்படும் மொழிக்குத்தான் இலக்கணம் உண்டு

என்ற தப்பான கருத்தை இது போக்குகின்றது. தொல்காப்பியருக்கு முன்னும் இலக்கியங்கள் இருந்

தன என்ற செய்தியும் பனம்பாரனர் . வாக்கால் விளங்குகிறது.

சிறப்புப்பாயிரத்தின் பிற்பகுதி தொல்காப்பிய

ரைப் பற்றிய வரலாற்றைச் சொல்லுகிறது. நிலந்தரு திரு விற்பாண்டியனுடைய அவைக்களத்தில் இந்த நூல் அரங்கேற்றப்பட்டது. தர்ம சாஸ்திரங்களையும் வேதங் களேயும் நன்கு உணர்ந்த அதங்கோட்டாசான் என்னும் பெரியார் தலமையில் அவர் கேட்கும் கேள் விகளுக்கெல்லாம் விடை கூறித் தொல்காப்பியர் தம் நூலே அரங்கேற்றினர். எழுத்து முதலிய மூன்று இலக்கணங்களையும் வகைப்படுத்தித் தெளிவாக்கினர். ‘ஐந்திர இலக்கண அறிவு நிறைந்த தொல்காப்பியன்’ என்று உலகம் போற்றும் புகழையும் தவவிரதத்தை யும் உடையவர் தொல்காப்பியர்.

கிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை காவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குர்ே வரைப்பின் ஐந்திரம் கிறைந்த தோல்காப்பியனெனத தன்பெயர் தோற்றிப் யல்புகழ் நிறுத்த படிமை யோனே.