பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியத்தின் முகவுரை 59

நிலம்தரு-பிறநாட்டைக் கைக்கொள்ளும் கரை-கூறும். முற்றிய-முற்றும் பயின்ற. அரில் தப -- குற்றம் நீங்க. தெரிந்து-காட்டி. படிமை-விரதம்.)

தொல்காப்பியர் முனிவர்; தவம் செய்பவர். அவர் வடமொழியிலும் சிறந்த அறிவுடையவர். அவருக்கு அம்மொழியின் இலக்கண இலக்கியங்களில் உரமான பயிற்சி இருந்தது. முக்கியமாக இந்திரனல் செய்யப் பெற்றதென்று கருதப்படும் ஐந்திர வியாகரணத்தில் அவர் சிறப்பான ஆராய்ச்சியுடையவர். அந்த வியா கரணத்தில் அமைந்துள்ள முறையைப் பார்த்தபோது தமிழுக்கும் அதைப்போலச் சிறந்த பான்மையில் ஓர் இலக்கணம் செய்யவேண்டுமென்று தோன்றிற்று.

வடமொழி இலக்கணத்துக்கும் தமிழ் இலக் கணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற சந்தேகம் இங்கே தோன்றக்கூடும். ஓர் அழகான ஆங்கிலப் புத்தகத்தைக் கடையில் ஒரு தமிழ்நூற் பதிப்பாளர் பார்க்கிறர். அதைப் போலவே த்மிழ்ப் புத்கத்தை அச்சிட்டு அட்டைபோட வேண்டுமென்று விரும்பு கிருர். அசல் அதே புத்தகம் என்று தோன்றும்படி யாகச் செய்ய அவரால் முடிகிறது அல்லவா? அங்கே இங்கிலீஷ் புத்தகத்துக்கும் தமிழ்ப் புத்தகத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு இடமில்லையே! பைண்டு, அட்டைச் சித்திரம், அச்சில் உள்ள சில தந்திரங்கள் இவை மொழிக்குப் புறம்பே புத்தக உற்பத்திக் கலேயைச் சார்ந்தவை. அவை எல்லாப் மொழிப் புத்தகங்களுக்கும் பொது. அப்படியே. மொழிக்கு இலக்கணம் என்பதும் பொதுவான செய்தி. ஒரு மொழியின் இலக்கணத்தை இப்படி: ஆரம்பித்து இப்படிச் சொல்லவேண்டும் என்று.