பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக் குடும்பம் 75

தைக் குறில் என்றும், நீண்ட ஒசை உடையதை நெடில் என்றும் வழங்குவது தமிழர் வழக்கம். அ? என்பது குறில்; அதை நீட்டி, ஆ’ என்ருல் அது நெடிலாகிவிடுகிறது.

உடம்பைப்போல இருக்கும் மெய்யெழுத்துக்களே ஒசையை நோக்கி மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிருர் கள், க, ச, ட, த, ப, ற’ என்பவற்றை உச்சரிக்கும் போது அவை மற்ற எழுத்துக்களேவிட அழுத்தமாக வும் பலமாகவும் உள்ள ஒசையாக இருக்கின்றன. வன்மையான ஓசையை உடைய அவற்றை வல்லினம் என்று வகுத்தார்கள். மூக்கிகுலே சொல்லும், ங், ஞ, ன, ந, ம, ன, என்ற எழுத்துக்களே மெல்லினம் என்ருர் கள்; மற்ற, ய, ர, ல, வ, ழ, ள என்ற ஆறையும் இடை யினம் என்ருக்கள்; வன்மையும் ஆகாமல் மென்மை

யும் ஆகாமல் நடுத்தரமான ஓசை உடையனவாத வால் இந்தப் பெயரை அமைத்தார்கள். உடம் போடு உலவும் பிராணிகளிலும் மனிதர்களிலும் உரம் படைத்த பகுதியை ஆணென்றும், உரமின்றி மென்மையான உடம்புடைய பகுதியைப் பெண் னென்றும் உலகத்தில் வழங்குகிருேம்; இரண்டும் இல்லாவிட்டால் அலி:ேன்று சொல்லுகிருேம்.

இந்த மூன்து பிரிவும் தனி உயிருக்கு இல்லை; ஆண்

உயிர், பெண் உயிர், அலி உயிர் என்று பிரிக்க முடி. யாது. உடம்பின் வேறுபாட்டால் உண்டாகும். பேதம் இது. எழுத்துக்களிலும் உடம்பைப்போல உள்ள மெய்யெழுத்துக்களுக்கே இந்த வேறுபாடு உண்டு. வல்லினம் ஆண் சாதியைப் போன்றது: மெல்லினம் பெண்ணினத்தைப் போன்றது; பெண் களே மெல்லியலார் என்று வழங்குவதை நாம் அறி