பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பயப்படாதீர்கள்

வோம் அல்லவா? இடையினம் அலிகளைப் போன் քt :51, -

உயிர் எழுத்துக்களில் ஒரே ஒலி குட்டையாக இருக்கும்போது குறிலாகவும், நீளும்போது நெடி லாகவும் ஆகிறது. அப்படி ஆகும் ஜோடிகளே ஒன்றுக்கு ஒன்று உறவுள்ளதாக எண்ணலாம்; அதாவது, குட்டையாக இருப்பவன் தம்பி, அவனே விட உயரமாக இருப்பவன் அண்ணன் என்று ஒரே

மாதிரியான தோற்றமுடையவர்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வது போல, இந்த உறவை நாம் உணர்ந்துகொள்ளலாம். அே எ ன் ற எழுத்து,

தம்பியானல், 'ஆ' என்ற எழுத்து அண்ணன், அண்ண் னும் தம்பியும் ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள். அந்த மாதிரியே, அ என்ற எழுத்தையும் அதன் நீண்ட ஒலியுருவமாகிய, ஆ என்ற எழுத்தையும் ஒரு ஜோடி யாக்கி 'அ' வுக்கு, ஆ இனம் என்று இலக்கணத்தில் சொல்லியிருக்கிருர்கள். இன, உஊ, எ,ஏ, ஒஒ’ என் பவற்றையும் இனமாக வகுத்திருக்கிருர்கள்.

இங்கே ஒரு சங்கடம் வருகிறது. அ என்பதை நீட்டி ஒலித்தால், 'ஆ' என்று வருகிறது. ஆகவே அந்த இரண்டையும் ஒரே இனமாகச் சேர்ப்பது பொருத்த மாக இருக்கிறது. ஐ, ஒள என்ற இரண்டு எழுத்துக் கள் இருக்கின்றனவே; அவற்றை எந்த எழுத்துக்க ளோடு சேர்ப்பது? அவற்றை இனமில்லாமல் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாக நிற்பவர்களைப்போல நினைப் பதா? இதற்கு இலக்கணக்காரர்கள் ஒரு வழி கண்டு பிடித்தார்கள். அண்ணன் தம்பியில்லாமல் வீடும் இல்லாமல் உலவும் மனிதர்களை, உணர்ச்சி ஒத்திருப் பதால் நண்பு பூண்டு தம்முடைய வீட்டிலே வைத்து