பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக் குடும்பம் . 77

வளர்ப்பவர்கள் உலகத்தில் இல்லையா? அப்படி அநாதையாக வந்தவர்கள் வளர்ப்புப் பிள் இளகளாக இருந்தாலும் மற்றப் பிள்ளைகளோடு சகோதரர்களைப் போல் பழகுவதை நாம் பார்க்கிருேமே. அந்த மாதிரி, ஐ, ஒள என்ற எழுத்துக்கள் ஒரு வகையில் தமக்குச் சம்பந்தமுள்ள எழுத்துக்களைத் தம்பிகளாக இன எழுத்துக்களாகப் பற்றிக்கொண்டன. ஈ என்ற எழுத்தை உச்சரித்து நிறுத்தும்போது இ’ என்ற ஒலியாக நிற்கிறது. ஐ’ என்ற எழுத்தை உச்சரித்துப் பாருங்கள்; கடைசியில், இ’ என்ற ஒலியாக நிற்பதை உணரலாம். ஆகவே, ஐ’ என்ற எழுத்துக்கு இனம் "இ" என்று ஒலியாராய்ச்சியை நன்கு கண்ட தமிழர் வரையறுத்தார்கள். அப்படியே, 'ஒள' என்ற எழுத் துக்கு, உ என்று வைத்தார்கள். ஒள என்று சொல் லிப் பாருங்கள்; அந்த ஒலி கடைசியில் உ?-வில் வந்து நிற்கும். ... .

உயிர் எழுத்துக்களில் - ஜோடி பிரிக்கும்போது

அண்ணன் தம்பி உறவு ஞாபகத்துக்கு வந்தது. மெய் யெழுத்துக்களிலும் ஜோடி பிரித்திருக்கிறர்கள்.

அனுல் அங்கே கணவன் மனைவி என்ற உறவுதான். நினவுக்கு வருகிறது. வல்லினம் ஆண் இனம், மெல்லினம் பெண் இனம் என்ருல் அந்த உறவு முறைதானே இருக்க முடியும்? க’ என்பது ஆண்

எழுத்து, கணவனுடைய நிலையில் இருப்பது. அதற்கு மெல்லினத்துக்குள் ஒன்றை ஜோடியாகச் சேர்க்கவேண்டும். எப்படிச் சேர்ப்பது? க என்று.

உச்சரிக்கும்போது முக்கிலிருந்து ஓசையை விட்டுப்