பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பயப்படாதீர்கள்

பாருங்கள்; 'ங்' என்ற சப்தத்தைப்போல ஒலிக்கும். 'க, ங் என்ற இரண்டு எழுத்துக்களும் அடி நாக்கும் தொண்டையும் ஒட்டும்போது பிறக்கின்றவை. ஆகையால் அந்த இரண்டும் ஒன்றற்கொன்று சம்பந் தம் உடையவை என்று வைத்தார்கள். க’ என்ற எழுத்துக்கு, ங் என்பதே இனம். இப்படியே சஞ-’ டண. தந-பம-றன, என்பவை ஜோடிகள் ஆயின. யே ர ல வ ழ ள என்ற ஆறும் அலி போன்றவை. அலிக்குக் கல்யாணம் செய்து என்ன பிரயோசனம்? ஆகையால் அவைகளுக்கு மனேவிமார் இல்லே, இனம் இல்லையென்று இலக்கணத்தில் வைத்திருக்கிருர்கள்.

  • .

மெல்லினமும் வல்லினமும் சேர்ந்து வரும்போது பெரும்பாலும் மேலே சொன்ன ஜோடிகளாகவே இருக்கும். சங்கு, பஞ்சு, தொண்டு, பந்து, கன்று என் பவற்றில் இந்த எழுத்துத் தம்பதிகள் சேர்ந்து வருவ தைப் பார்க்கிருேம். சங்சு என்ருே, கன்து என்ருே. வருவது எழுத்துக் குடும்பத்தில் விபசார தோஷத்துக் குச் சமானம்.

மரம்+சாய்ந்தது என்று இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. தனித் தனியே நின்ருல் மரம் என்பதி லுள்ள 'ம்' அப்படியே நிற்கலாம். இரண்டு வார்த்தை யும் சேரும்போது, 'ம்' என்ற எழுத்தும், சா’ என்ற எழுத்தும் ஒன்றுபடுவதில்லை. ம்ே என்ற பெண் தன் முன்னே நிற்கும் கனவ&னப் பார்க்கிருள்; தன் கணவன் அல்ல என்று தெரிந்துபோகிறது. கற்பு டைய பெண் அல்லவா? நடுநடுங்கிப் போகிருள். தூர இருந்து பழகும்போது குற்றம் இல்லை என்று நின்றவள், அருகிலே வந்தபோது அஞ்சுகிருள். இப்படி ஒர் எழுத்து மற்றேர் எழுத்தோடு அருகில்